Share via:
திருச்சி வேலுச்சாமி, பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர்,
ஜோதிமணி ஆகியோர் தொடர்ந்து திமுகவுடன் மல்லுக்கட்டி வந்த நிலையில், மதுரையில் திமுக
எம்.எல்.ஏ. தளபதி ஆவேசமாகப் பேசியது பெரும் பஞ்சாயத்தாக மாறியிருக்கிறது.
இதுவரை அமைதியாக இருந்த செல்வப்பெருந்தகை, ‘’மொழிப்போர் தியாகிகள்
வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் பேரியக்கத்தை அவமதிக்கும் வகையில் திமுக
மாநகர செயலாளர் கோ.தளபதி பேசியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
கூட்டணி அரசியலின் மாண்பை மிதித்து, பொது மேடையில் காங்கிரஸ் பேரியக்கத்தையும்,
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இழிவுபடுத்திப் பேசிய திமுக மாநகர செயலாளர்
கோ.தளபதி அவர்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களை தமிழ்நாடு
காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.’’என்று கேட்டுள்ளார்.
இந்நிலையில் மாணிக்கம் தாகூர், ‘’ 22 ஆண்டுகளாக நண்பர்கள் ,ஆன வெற்றிக்கு பிறகு பங்கு
என கூறினால் எப்படி இப்படி தரம்தாழ்ந்து தளபதி அவர்கள் பேசுகிறார்?. நாட்டை காக்க சங்கிகளை
வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் கொண்ட நாம் என்று வெல்வோம்.வாய் புளித்ததோ, மாங்காய்
புளித்ததோ’ என்பதுபோல் காங்கிரஸ் கட்சியை தாக்குவது பொறுப்பற்ற அரசியல்’’ என்று பொங்கியிருக்கிறார்.
இந்நிலையில் திமுகைனர், ‘’எடப்பாடி,, விஜயபாஸ்கர் வேலுமணி, தங்கமணி,
அன்புமணி. தினகரன் மாதிரி மாணிக்கமும் பாஜகவின் சிபிஐ, ஐடி, ஈடி, மூலமாக வசமாக சிக்கி
இருக்கிறார் போல. இப்படி… பேசிப் பேசி… கூட இருந்தே கூட்டணிக்கு குழி பறிக்கிறார்.
மாணிக்கம் பாஜகவின் ஸ்லீப்பர்செல் என்று நன்றாகவே தெரிகிறது. இவர் இதுபோல பேசப் பேச
காங்கிரஸ் மீதான வெறுப்புதான் திமுக கூட்டணிக்குள் அதிகரிக்கிறது. அது… மேலும் மேலும்
காங்கிரசுக்கு ஒதுக்கப்பட இருக்கிற இடங்களை நிச்சயமாக குறைக்கும்.
திமுக வென்ற தொகுதியை தட்டிப் படிக்கிற உரிமை காங்கிரஸ் கட்சிக்கு
நிச்சயமாக கிடையாது. தற்போது காங்கிரஸ் வசமுள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளை… திமுகவிடம்
காங்கிரஸ் மீண்டும் கேட்டால்… அதுவே அக்கட்சிக்கு அதிகம் தான். 18 தொகுதிகளை பெற்றுவிட்டால்…
அதுவே… 2026 சட்டமன்றத் தேர்தல் அரசியலில் ஓர் அதிசயம்தான். திருச்சி வேலுசாமி மீது
நடவடிக்கை எடுத்துவிட்டு பேசுங்கள்’’ என்று கொதிக்கிறார்கள்.
சீக்கிரம் பஞ்சாயத்து இருக்கும்.
