Share via:
சென்னைக்கு அழகான பெண் மேயர் பிரியா கிடைத்திருக்கிறார், மழை வெள்ளத்தில்
மக்களுடன் நிற்கிறார் என்றெல்லாம் மக்கள் பெருமைப்பட்டு வரும் நேரத்தில், தன்னை விட
கலக்கலாக லிப்ஸ்டிக் போட்டிருந்த காரணத்திற்காக சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதரான
மாதவி பணியிட மாற்றம் செய்திருப்பதாக வந்திருக்கும் செய்தி கலங்கடிக்கிறது.
கடந்த மாதம் மேயர் பிரியாவின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தபேதார்
மாதவி போட்டிருந்த லிப்ஸ்டிக் மேயர் பிரியாவை விட அழகாகவும் கலர் தூக்கலாகவும் இருந்ததாம். எனவே, பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் மேயர் பிரியா ரொம்பவே அப்செட் ஆனாராம். இதையடுத்து பிரியாவின் உதவியாளர்
சிவசங்கர் மாதவியைக் கூப்பிட்டுக் கடுமையாக கண்டித்திருக்கிறார். இதையடுத்து மேயர்
பிரியாவுக்கு இணையாக லிப்ஸ்டிக் போட்டு வரக்கூடாது என்று கண்டிப்பு செய்யப்பட்டதுடன்
நில்லாமல் மெமோ கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மெமோவுக்குப் பதில் அளித்திருக்கும் மாதவி, ‘லிப்ஸ்டிக் போடுவது
குற்றம் என்று அரசு சட்டத்திலிருந்தால் காட்டுங்கள். நான் அணியமாட்டேன்’ என்று நறுக்கென
பதில் கொடுத்திருக்கிறார். அதோடு மீண்டும் மாதவி லிப்ஸ்டிக் போட்டு வந்திருக்கிறார். இதனால்
பிரியா கடுப்பாகவே, மாதவியை அடுத்த சில நிமிடங்களிலே இடமாற்றமும் செய்திருக்கிறார்கள்.
இந்த விவகாரம் இப்போது தான் வெளியே தெரியவந்திருக்கிறது.
அழகு இருக்கலாம் ஆனால் ஆணவம் இருக்கக்கூடாது. பெண்களுக்கு எதிராக
ஒரு பெண்ணே இப்படி குற்றம் செய்யலாமா..? பிரியா மீது மீ டூ புகார் பதிய வேண்டும் என்றெல்லாம்
பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.