Share via:
தி.மு.க.வின் வாரிசு அரசியலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து
வளர்ச்சி அடைந்துள்ள நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சிகளில் சீமானின் மனைவி கயல்விழி வம்படியாக
திணிக்கப்படுவதாக வரும் செய்திகளால், தம்பிகள் கடும் வருத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தி.மு.க.வுக்கு இளைஞர் அணி மூலம் கட்சிக்குள் நுழைந்த ஸ்டாலின்
தலைவராக மாறினார். அதேபோல் இளைஞர் அணி மூலம் நுழைந்த உதயநிதியும் அடுத்த தலைவராக மாறிவிட்டார்.
அதே வழியில் வழக்கறிஞர் பாசறையைச் சேர்ந்த சீமானின் கயல்விழி பொதுக்குழு
மீட்டிங்கில் கலந்துகொண்டதை தி.மு.க.வினர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்கள். இந்த
நிலையில், நாம் தமிழர் கட்சி திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி,
குத்துவிளக்கேற்றி திறந்து வைத்திருக்கிறார் வழக்கறிஞர் கயல்விழி சீமான்.
இந்த திறப்புவிழா திட்டமிட்டு நடக்கவில்லை தற்செயலாக கயல்விழியை
அழைத்து திறப்பு விழா நடத்தப்பட்டது என்று சீமானின் ஆட்கள் கொடுத்துவரும் விளக்கத்திற்குப்
பதிலடியாக, திறப்பு விழாவில் கயல்விழி சீமான் கலந்துகொள்வதாக அடிக்கப்பட்ட நோட்டீஸை
தி.மு.க.வினர் பரப்பிவருகிறார்கள்.
இப்போது நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி காலியாக இருகிறது.
இந்த பதவியில் கயல்விழியை அமரவைக்க்கவே, இந்த நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.
ஆனால், இதெல்லாம் அண்ணன் சீமானுக்குத் தெரியாமல் நடக்கிறது. அவருக்குத்
தெரிந்தால் நடப்பதே வேறு என்று அவரது சீரியஸ் தம்பிகள் இன்னமும் ஆவேசம் காட்டி வருகிறார்கள்
என்பதுதான் ஆச்சர்யம்.