நடிகர் அஜித்குமார் கார் ரேசில் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெற்றி அடைந்திருக்கும் நிலையில், இந்த வெற்றிக்குக் காரணம் உதயநிதியா… ஜெயலலிதாவா என்று அக்கப்போர் மோதல் நடக்கிறது.

துபாயில் நடைபெற்று வரும் துபாய் 24எச் கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் பிரிவில் நடிகர் அஜித்குமார் அணி 3-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த போட்டியில் அஜித் குமார் 414ஆம் எண் கொண்ட காரின் ஓட்டுநராக கலந்துகொண்டார். அவருக்கு ‘ஸ்ப்ரிட் ஆஃப் தி ரேஸ்’ விருது வழங்கப்பட்டது. அஜித்குமார் தனது ரேஸிங் அணியை தொடங்கிய பிறகு கலந்து கொண்ட முதல் சர்வதேச பந்தயத்திலேயே மூன்றாவது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 992 பிரிவில் 3வது இடமும் ஒட்டுமொத்த போட்டியில் 23வது இடத்தையும் அந்த அணி பிடித்துள்ளது.

இந்த வெற்றிக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இது குறித்து உதயநிதி, ‘’அஜித் மற்றும் அவரது அணி கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் பிரிவில் 3ஆம் பிடித்துள்ளதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். நம்முடைய @SportsTN_ (SDAT) Logo-வை ‘அஜித்குமார் ரேசிங்’ யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம். இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு @SportsTN_ சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்..’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதேநேரம் அ.தி.மு.க.வினர், ‘’ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு என்ற அமைப்பு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உருவாக்கியது ஆகும். அதேபோல் அரசுத் துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கு 3% Reservation உருவாக்கியவர் எடப்பாடி பழனிசாமி. ஆகவே, இந்த லோகோவை அணிந்து போட்டியிட்டு தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கும் அஜித்துக்கு நன்றியும் வாழ்த்துகளும் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் அஜித் ரசிகர்கள், ‘’இந்த வெற்றிக்கு முழு காரணமும் அஜித் மட்டுமே. ஜெயலலிதாவையும் உதயநிதியையும் இதில் இழுக்காதீர்கள்’’ என்பதுடன் இந்த ரேஸ் குறித்து சில முக்கிய தகவல்களை ரசிகர்கள் பரப்பிவருகிறார்கள். நடிகர் அஜித் பல ஆண்டுகளுக்கு முன்.. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன் இதேபோல் ரேஸில் பங்கேற்று இருக்கிறார். அவருக்கு தொடர்ந்து ஸ்பான்சர் கிடைக்கவில்லை. இப்போது அவரே பொருளாதாரத்தை உருவாக்கி.. அவரே அணியை உருவாக்கி.. மற்றவர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில் உயர்ந்து உள்ளார். அவரே தற்போது ஸ்பான்சர் தரும் நபராக உருவெடுத்து உள்ளார். அவர் காலத்திற்காக காத்திருந்தார்.. அதற்கான உழைப்பையும் போட்டார்!

24H Dubai 2025 & The European 24H Series Championship – Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித் குமார் பயிற்சியின் போதே விபத்துக்கு உள்ளானார். ஆனாலும் அவர் அஞ்சி ஒதுங்காமல் தொடர்ந்து தொடரில் கலந்து கொண்டார். அதே சமயம் 24H Dubai 2025 & The European 24H Series Championship – Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித் குமார் ஒரு போட்டியில் மட்டும் கலந்து கொண்டு மற்ற போட்டிகளில் இருந்து ஒதுங்கி அணிக்கு ஏற்றபடி திட்டங்களை வகுத்தார். எப்போது முன் நிற்க வேண்டும்.. எப்போது விலகி நிற்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்து இருந்தார். இதை பலரும் உணர்ந்து கொள்ள வேண்டியது கட்டாயம்’’ என்று பாராட்டி வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link