Share via:
வரும் சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் திமுகவின் முக்கியப் புள்ளிகளில்
பலர் சிறையில் இருப்பார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து
பல கூட்டங்களில் பேசிவருகிறார். அப்படி இபிஎஸ் பேசுவது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில்
அமலாக்கத்துறை நடவடிக்கை வேகமெடுத்துவருகிறது. இந்த நிலையில் நேரு கைதானால் அன்பில்
மகேஸ்க்கு செல்வாக்கு அதிகரிக்கும் என்று திமுகவே அமைதி காப்பாதாக ஒரு செய்தி வெளியாகிறது.
அமைச்சர் நேரு மீது அமலாக்கத்துறை பணி நியமனத்தில் 888 கோடி ஊழல்
என்று முதல் கடிதம் டிஜிபிக்கு அனுப்பியது. இதையடுத்து டெண்டர் ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட
ஊழல் 1020 கோடிக்கு நடந்துள்ளது என இரண்டாவது கடிதம் அனுப்பப்பட்டது.
முதல் கடிதத்தைக் கண்டுகொள்ளாமல் இருந்த ஸ்டாலின், இரண்டாவது கடிதம்
வந்ததும் கண் துடைப்புக்காக விசாரணைக்கு உத்தரவு போட்டார். ஆனால், வேறு எந்த நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை.
இப்போது நேருவின் துறையில் பணியிட மாற்ற ஊழல் – 365 கோடி என மூன்றாவது
கடிதம் ஒன்றை அமலாக்கத்துறை அனுப்பியிருக்கிறது. ஒரு அரசுத் துறையில் இத்தனை ஊழல் செய்ய
முடியுமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். நேருவின் துறையில் ஊழியர்கள் நியமனம்,
பணி மாறுதல், ஒதுக்கப்படும் டெண்டர் ஒதுக்கப்படும் அனைத்து விஷயத்திலும் சுமார் 2 ஆயிரம்
கோடி ரூபாய் சுருட்டியது உறுதியாகியுள்ளது.
திமுகவின் தேர்தல் பணியில் கே.என்.நேருவின் பங்கு எப்போதும் முக்கியமாக
இருக்கும். இப்போது, அதனை உடைத்துக் கட்டும் வகையில் நேருவை கண்டிப்பாக பிப்ரவரியில்
அமலாக்கத்துறை கைது செய்யும் என்று சொல்லப்படுகிறது. நேருக்கு சிறைக்குள்தான் தேர்தல்
என்கிறார்கள்.
நேருவை காப்பாற்றுவதற்கு திமுக எந்த முயற்சியும் செய்யவில்லை என்கிறார்கள்.
நேரு ஜெயிலுக்குப் போனால், அது அன்பில் மகேஸ்க்கு நன்மையாக இருக்கும், திருச்சியை அவர்
கையில் எடுத்துக்கொள்வார் என்று உதயநிதி சொல்கிறாராம். அதனாலே திமுக அமைதி காக்கிறதாம்.
