Share via:
மதத்தை முன்னிறுத்தி மக்களை கவர்வது தான் பா.ஜ.க.வின் தேர்தல்
பாலிசி. அந்த வகையில் ஜோசப் விஜய்யை இப்போது களத்தில் இறக்கியிருக்கிறார்கள். 2026
தேர்தலில் தி.மு.க. வாக்குகளை உடைப்பதற்கு பயன்படுத்தப் போகிறார்கள் என்றெல்லாம் ஹேஸ்யம்
கூறப்பட்டு வந்தது.
கிறிஸ்தவரான விஜய் எப்படி இந்துக்கள் வாக்குகளை பெற முடியும்,
விஜய் பா.ஜ.க.வின் டீம் இல்லை என்று அவரது மன்றத்தினர் கூறிவந்த நிலையில் இந்து கோயில்
ஒன்றே கட்டிக்கொடுத்து இருப்பதாக ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது.
ஒரு சாய் பாபா கோயிலில் விஜய் இருப்பது போன்ற புகைப்படம் நேற்று
வைரலானது. அந்தக் கோயில் சென்னை கொரட்டூரில் 8 கிரவுண்ட் நிலத்தில், நடிகர் விஜய் கட்டியது
எனத் தெரியவந்துள்ளது. ஷோபா தீவிர சாய் பாபா பக்தை என்பதால், அவரது ஆசைக்காக 8 கிரவுண்ட்
நிலத்தில் விஜய் இந்தக் கோயிலை கட்டிக் கொடுத்துள்ளாராம்.
ஒரே நேரத்தில் கிறிஸ்தவ மற்றும் இந்து மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கு
விஜய் எடுத்துவரும் முயற்சி என்கிறார்கள். பா.ஜ.க.வுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று பொய்யான
அறிக்கை வந்தவுடன், அது பொய் என்று கூறப்பட்டது போன்று இதற்கு இதுவரை விளக்கம் எதுவும்
வரவில்லை. அப்படின்னா இது உண்மையாண்ணா…