Share via:
தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி
மீண்டும் மீண்டும் உறுதியாகக் கூறிவந்தாலும், அதற்கு பா.ஜ.க. முழுமையாக உடன்படவில்லை.
கூட்டணி இல்லை என்றால் இரட்டை இலை முடக்கப்படும் என்று தொடர்ந்து எச்சரித்துவருவதாக
சொல்லப்படுகிறது. இதனை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் இன்றைய நீதிமன்றத் தீர்ப்பு
அமைந்திருக்கிறது.
இரட்டை இலை எடப்பாடி பழனிசாமி தரப்புக்குச் சொந்தமானது என்பதை
தேர்தல் கமிஷன் ஏற்கெனவே தெளிவாக அறிவித்துவிட்டது. ஆனாலும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு
இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு எதிராக புகழேந்தி அளித்த மனுவை விரைவாக விசாரித்து
தீர்வு வழங்குமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவு அ.தி.மு.கவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம், கட்சிப் பதவிகளில் தனக்கு சாதகமான நபர்களை மாற்றம் செய்வதற்கு
எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருவதும் தெரியவந்துள்ளது. சமீபத்தில் நடந்த அதிமுக
பொதுக்குழு – செயற்குழு மாநாட்டில் கட்சியின் பொருளாளரான திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொள்ளவில்லை.
அதற்கு அவரது உடல்நிலை சரியில்லை என்று கூறப்பட்டது.
ஆனால், எடப்பாடி பழனிசாமி புதிய பொருளாளராக முன்னாள் முன்னாள்
சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கரை நியமனம் செய்ய இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த
மாநாட்டில் அசைவ விருந்து உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் விஜயபாஸ்கரே ஏற்றுக் கொண்டாராம்.
இப்படி கட்சிக்குச் செலவழிக்கும் நபருக்கே பொருளாளர் பதவி என்று எடப்பாடி முடிவு செய்துவிட்டார்.
ஆகவே, எந்த நேரமும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு கல்தா அறிவிப்பு வரலாம் என்று சொல்லப்படுகிறது.
ஒரு டம்மி பதவியில் திண்டுக்கல் சீனிவாசன் அமர்த்தப்படுவார் என்று
சொல்லப்படுகிறது. அவ்வப்போது தேவையில்லாத பேச்சுகளைப் பேசுவதாலும் அவருக்கான முக்கியத்துவம்
குறைக்கப்படுகிறது என்கிறார்கள்.