News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தேர்தல் நேரம் நெருங்கும்போது கட்சி தாவல் நடப்பது சகஜமே. ஆனால், பா.ஜ.க.வில் இருந்து நடிகை கெளதமி எடப்பாடி முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்திருப்பது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியிருக்கிறது.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட நடிகை கெளதமி ஆர்வமாக இருந்தார். பூர்வாங்க வேலைகளும் தொடங்கியிருந்தார். ஆனால், ராஜேந்திரபாலாஜி காரணமாக கெளதமிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதையடுத்தே, பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் தனது நிலத்தை விற்று பண மோசடி செய்துவிட்டதாக அவர் வெளிப்படையாகப் புகார் தெரிவித்திருந்தார். ஆனால், கட்சி இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த ஆண்டு அக்கட்சியில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்பு திடீரென கெளதமி இணைந்துள்ளார். சமீபத்தில் நடிகை காயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிலையில் அடுத்த வரவாக கெளதமி இருக்கிறார்.

இதுகுறித்து நடிகை கெளதமி, “பாஜகவில் இருந்தாலும் எனக்கு அம்மா (ஜெயலலிதா) மீது தனிப் பிரியமும், மரியாதையும் உண்டு. அம்மா என் மனதில் எத்தனை வருடங்களாக இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட விஷயம். மொத்த அரசியல் வாழ்க்கையையும் மக்களுக்காக அர்ப்பணித்த தலைவராக அம்மா இருந்திருக்கிறார். அவருக்கு பிறகு, அதிமுகவை அதே கட்டுக்கோப்புடனும், அதே வழியிலும் நடத்திக் கொண்டு செல்லும் எடப்பாடி பழனிசாமியை பார்க்கும் போது, எனக்கு முழு நம்பிக்கை வந்தது. அதனால்தான் அதிமுகவில் இணைந்தேன்” என கூறியிருந்தார்.

ஆனால், கெளதமி அ.தி.மு.க.வில் இணைந்த காரணம் அவரை கோவை தொகுதியில் நிறுத்துவது என்று கூறப்படுகிறது. கமல்ஹாசன் இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் நிற்கப் போவது உறுதியாகியிருக்கிறது. ஆகவே, அவரை தோற்கடிக்க வேண்டும் என்பது பா.ஜ.க.வின் பிளான். கமல்ஹாசனை அ.தி.மு.க. எதிர்த்தால் மட்டுமே தோற்கடிக்க முடியும் என்பதால் அவரை அங்கே அனுப்பி வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கமல்ஹாசன் கோவை தவிர வேறு எங்கு நிறுத்தப்பட்டாலும் கெளதமி எதிர்த்து நிற்கப் போகிறாராம். பிரசாரம் சூப்பரா இருக்குமே… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link