Share via:
40 தொகுதிகள் கொண்ட தமிழகத்துக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படும்
அதேநேரத்தில் உத்திரப்பிரதேசத்திற்கு மட்டும் ஏழு கட்டமாகத் தேர்தல் நடத்தப்படுவதற்குப்
பின்னே ஆளும் பா.ஜ.க.வின் அழுத்தம் இருப்பதாக கருதப்படுகிறது.
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. ஆகியவற்றை தனக்கு சாதகமாக
பயன்படுத்தி வந்த பா.ஜ.க. பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்திற்கு வசதியாகவே தேர்தல்
நடத்துவதாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 2014ம் ஆண்டுக்குப் பிறகு ஜம்மு
காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படாததும் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
இது குறித்து தி.மு.க. சார்பில், ’40 மக்களவை தொகுதிகள் மட்டுமே
இருக்கும் பீகாருக்கு எதற்கு 7 கட்ட தேர்தல்!!?? மகாராஷ்டிராவுக்கு எதற்கு 5 கட்ட தேர்தல்!?
11 தொகுதிகள் கொண்ட சிறிய மாநிலமான சத்தீஸ்கார்க்கு 3 கட்ட தேர்தல் எதற்கு? மேற்கு
வங்கத்துக்கு எதற்கு 7 கட்ட தேர்தல்? நரேந்திர மோடி அமித்ஷா இருவருக்கும் குறைந்தபட்ச
நேர்மையோ, துணிச்சலோ இல்லை என்பதற்கு இதுவே சான்று. தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு சாதகமாக
செயல்படாது என்று உறுதியாக கூற முடியுமா!??
பிரதமர் மோடிக்கு தேர்தல் தேதி முன்கூட்டியே தெரிந்து இருக்கிறது.
இதன் காரணமாகத்தான் முதற்கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாட்டில், பல்லடம், மதுரை,
சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சார கூட்டங்களை முன்பே நடத்தி முடித்துள்ளார்.
இது ஒரு ஜனநாயக படுகொலை’ என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
’பிரதமர் மோடி அவரது சுற்றுப்பயணத்தை
முடித்த பிறகு, அவருக்கு ஏதுவாக தேர்தல் தேதி
அறிவிக்கப்பட்டுள்ளது. 39 தொகுதிகள் கொண்ட தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல்
நடத்தப்படும்போது, வட இந்தியாவில் ஏன்
நடத்த முடியாது? தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை’ என்று வி.சி.க
தலைவர் திருமாளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
’சுதந்திரமாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம், பாஜகவின் கைப்பாவையாக
செயல்படுகிறது…’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.