Share via:
மன அமைதிக்காக ஹரித்துவார் சென்று ராமரை சந்திக்கப் போகிறேன் என்று
கூறிவிட்டுச் சென்றார் நயினார் நாகேந்திரன். அதன் பிறகு இரவு அமித்ஷாவை சந்தித்ததாக
செய்திகள் வெளியாகின.
இது ஒரு ரகசிய சந்திப்பு என்றும் இது குறித்து தகவல்கள் வெளியே
வரக்கூடாது என்று பாஜக மேலிடம் விரும்பியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், செங்கோட்டையன்
தரப்பில் செய்திகள் கசிய விடப்பட்டன. இந்த விவகாரம் அதிமுகவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
அமித்ஷா சந்திப்பு நடக்கவே இல்லை என்று மூத்த தலைவர்கள் சிலர்
உறுதி அளிக்கிறார்கள் என்றாலும் இது குறித்து யாரும் பேசுவதற்குத் தயாராக இல்லை. சந்திப்பு
குறித்து செங்கோட்டையனும் வாய் திறக்கவில்லை.
இந்நிலையில் எடப்பாடியை பதவியில் இருந்து தூக்குவதற்கு வழி இருக்கிறதா
என்று ஆலோசிக்கப்பட்டதாக திமுகவில் இருந்து செய்திகள் கசியவிடப்படுகின்றன. அதற்கு வாய்ப்பு
இல்லை என்று அமித்ஷா கூறிவிட்டாலும் முயற்சிகளுக்கு ஆசிர்வாதம் வழங்கப்படுகிறதாம்.
செங்கோட்டையன் தரப்புக்கு ஆட்களைப் பிடிப்பதற்கு பெட்டிகள் கைமாறியதாகவும்
சொல்லப்படுகிறது. அமித்ஷா பேச மாட்டார். செங்கோட்டையன் என்ன சொல்லப்போகிறார் என்று
பார்க்கலாம்.