உதயநிதிக்குப் போட்டியாக நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவிப்பு செய்திருப்பதை அடுத்து, அனைத்துக் கட்சிகளும் வரவேற்பு கொடுத்தார்கள். ஆனால், தி.மு.க.வினர் மட்டுமே தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறார்கள். குறிப்பாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொதுமேடையில் வைத்து, ‘விஜய்யைப் பார்த்து தி.மு.க.வினர் யாரும் பயப்படக் கூடாது’ என்று பேசியிருப்பது ஒப்புதல் வாக்குமூலமாக மாறியிருக்கிறது.

அமைச்சர் அன்பரசன் விஜய் வருகை குறித்து ஏற்கெனவே, ‘’நடிகர்கள் அரசியலுக்கு வருவாங்க… ஆனா, அவங்களுக்கு அறிவு இருக்குமான்னா இருக்காது. கட்சி நடத்துறதுன்னா சாதாரணமா?’ என்று முதலில் வம்பிழுத்தார்.

அடுத்து, ’படம் ரிலீசாகும் நேரத்தில் ரசிகர்களுக்கு இலவச டிக்கெட் கொடுக்காமல் 2 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட்டை விஜய் விற்கிறார். இவரால் நாட்டை பாதுகாக்க முடியுமா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதையடுத்து தாம்பரம் கூட்டத்தில் பேசிய தா.மோ.அன்பரசன், ‘“இன்று நடிகர்கள் எல்லாம் அரசியல் பக்கம் வந்துவிட்டனர். ஏற்கனவே வந்த நடிகர் நிலைமை எல்லாம் என்ன என்று நாம் பார்த்துவிட்டோம். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து என்ன ஆனார். அதேபோல் தற்போது ஒருவர் அரசியலுக்கு வந்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்த படமே 2 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடவில்லை. அவர் ஆரம்பித்த அரசியல் கட்சி 6 மாதம் தான் ஓடும். அதற்கு மேல் தமிழக வெற்றிக் கழகம் ஓடாது. யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவினர் பயப்பட கூடாது…’’ என்று பேசியிருக்கிறார்.

இதையடுத்து அமைச்சர் அன்பரசனை விஜய் நிர்வாகிகள் கேலியும் கிண்டலுமாக விமர்சனம் செய்துவருகிறார்கள். யாரும் பயப்படக் கூடாதுன்னு சொன்னாலே பயப்படுகிறார்கள் என்றுதான் அர்த்தம். தி.மு.க. ஆட்சியை முடித்துவைக்கப் போகிறார் விஜய்’’ என்று சவால் விடுகிறார்கள். அதோடு விஜய் படத்தின் சூப்பர் ஹிட் கலெக்‌ஷன் ரிப்போர்ட்டை பரப்பி வருகிறார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link