Share via:
செயற்குழுக் கூட்டம் என்றதும் தன்னுடைய ஜனநாயகன் படத்துக்கு செய்யப்படும்
இடையூறு மற்றும் சிபிஐ பற்றி விஜய் ஆவேசமாகப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில்,,
வழக்கம்போல் திமுக எதிர்ப்பு பற்றி மட்டுமே பேசியது அவரது ஆதரவாளர்களை அதிரவிட்டுள்ளது.
அதேபோல், கரூர் சம்பவத்தில் ஆதரவாக இருந்த அதிமுகவை ஊழல் கட்சி
என்று பேசியதற்கு கடுமையான எதிர்விளைவுகள் உருவாகியுள்ளன. இதுகுறித்து நாம் தமிழர்
கட்சியினர், ‘’அதிமுகவை ஊழல் கட்சியெனத் திருவாய் மலர்ந்தருளிவிட்டார் விஜய். அதேநேரம்
அதிமுகவில் ஊழல் செய்து, சிறைத்தண்டனை பெற்ற ஜெயலலிதாவை ஏற்றுக்கொள்கிறார் விஜய்.
2021ஆம் ஆண்டுவரை அதிமுகவின் அமைச்சரவையில் அங்கம் வகித்த செங்கோட்டையனைப் பக்கத்தில்
உட்கார வைத்திருக்கிறார் விஜய். அதாவது, அதிமுக ஊழல் கட்சி; ஜெயலலிதாவும், செங்கோட்டையனும்
நல்ல தலைவர்கள்! செம லாஜிக்..’’ என்று கிண்டல் செய்கிறார்கள்.
அதேநேரம் ஊழல் பற்றி பேசும் விஜய்யின் ஊழலை அதிமுகவினர் பிரித்து
மேய்கிறார்கள். ‘’ஜனநாயகன் படத்தை வரவிடாமல் தடுப்பது யார் என்பதைக்கூட துணிச்சலாக
சொல்ல தயக்கம். இப்படி எதிலும் தெளிவற்ற நிலை. இதில் மக்கள் தன்னை முதலமைச்சராக்குவார்கள்
என்று பகல் கனவு.
இன்று நடந்த விஜய் கூட்டத்தில், விஜய்க்கு நேராக கண்ணுக்குப் படும்
இடங்களில் அமருபவர்களிடம் ரூ.20,000/- இரண்டாம் வரிசையில் அமருபவர்களிடம் ரூ.10,000/-
வசூலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படிப்பட்ட சூழலில், “நான் ஊழல் செய்ய
மாட்டேன்” என்று சொல்லுவதற்கு நெஞ்சுக்குத் தைரியம் வேண்டுமே!
புலி படத்திற்கு ₹ 5 கோடி
ரொக்கமாக வாங்கி இருக்கிறார் விஜய். அதை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளார்,
வருமான வரி சோதனையில் அதை கண்டுபிடுத்து உள்ளனர். அதை வருமான வரி தாக்கல் படிவத்தை
revise செய்து காட்டியுள்ளார். இதனால் 271AAB என்ற penalty போடப்பட்டது. அதற்கு அவர்
writ petition மெட்ராஸ் உயர் நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அதேபோல் Rolls Royce காரை இறக்குமதி செய்து அதற்கு import tax
கட்டாமல் இருக்க , customs duty இல் இருந்து விலக்கு கேட்டுள்ளார். அது முடியாது என்றதும்
கோர்ட் போய் திரும்பிவந்தார்.
மாஸ்டர் படம் ஷூட்டிங் அப்போ நடந்த வருமான வரி ரெய்டு தான் அருண்ராஜ்
தலைமையில் நடந்தது. ஊழலை பற்றி பேசுபவர், என் ரசிகர்கள் யாரும் பிளாக்கில் டிக்கெட்
எடுக்க வேண்டாம் என்று ஒரு தடவை கூட சொல்லாதது ஏன்?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
கூட்டணிக்கு யாரும் இல்லாமல் எல்லோரையும் எதிரியாக்கிவிட்டு தனியே
நின்று என்ன செய்யப்போகிறார் விஜய். ஜனநாயகனை பற்றி பேசமுடியாத விசிலுக்குக் கெட்ட
நேரம் ஆரம்பிச்சிடுச்சு.
அதிமுகவினர் ஆவேசம் குறித்து பேசுபவர்கள், ‘’விஜய்யை நேரடியாக
விமர்சனம் செய்வது என்ற முடிவை “போட்டி தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையே மட்டும்தான்”
என்று விஜய் சொன்னபோதே அதிமுக எடுத்திருக்க வேண்டும். 32 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட கட்சியை
களத்திலேயே இல்லை என்று விஜய் சொன்னவுடன் விமர்சனத்தை தொடங்கியிருக்க வேண்டும். தாமதமான
முடிவென்றாலும் சரியான முடிவு…’’ என்று வரவேற்கிறார்கள்.
செங்கோட்டையனே தடுமாறிக்கொண்டு நிற்கிறார்.
