News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கள்ளக்குறிச்சி விஷசாராய மரண செய்தி கேட்ட உடனேயே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிவாரணம் என்று அறிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கும் பல சலுகைகளை சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்தார்.


இந்நிலையில் சென்னையை சேர்ந்த முகமது கோஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் தீ விபத்து உள்ளிட்ட விபத்துகளில் உயிரிழந்வர்களுக்கு குறைந்த இழப்பீடு வழங்கும் நிலையில், விஷசாராயம் குடித்து பலியானவர்களுக்கு எதன் அடிப்படையில் அதிக இழப்பீடு வழங்கப்படுகிறது என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை. எனவே தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.


இதைத்தொடர்ந்து நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அதிகம் என்றும், இந்த தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசு கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதில் ஏற்கனவே 10 லட்சம் ரூபாய் வாங்கியவர்களின் நிலை என்ன என்பது குறித்து போகப்போகத் தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link