Share via:
சூரியனார் கோயில்
ஆதீன மடாதிபதி ஒரு பெண் பக்தையை திருமணம் செய்துள்ள விவகாரம் படு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
பாலியல் வீடியோவில் சிக்கிக்கொண்ட காரணதால் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு
ஆளாகிவிட்டார் என்று ஒரு செய்தி பரபரக்கிறது.
திருவிடைமருதூர்:
சூரியனார் கோயில் ஆதீனத்தின் 28வது மடாதிபதியாக இருக்கிறார் மகாலிங்க சுவாமி. இவர்
கடந்த மாதம் 10ம் தேதி ஹேமாஸ்ரீ என்பவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக ஒரு செய்தி
வைரலானது. சம்பந்தப்பட்ட பெண்ணும் அவரது உறவினர்களும் சேர்த்து சொத்தைக் கைப்பற்றுவதற்காக
பாலியல் வீடியோவில் ஆதினத்தை சிக்க வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், மடாதிபதி
மகாலிங்க சுவாமி, ‘’கர்நாடகாவில் சிவாக்கிர யோகிகள் மடம் தொடங்குவதற்காக கர்நாடகா மாநிலத்தை
சேர்ந்த ஹேமாஸ்ரீ இடம் வழங்கினார். அந்த மடத்தை நிர்வாகம் செய்ய டிரஸ்டியாக நியமனம்
செய்ய ஏதுவாக அவரை வெளிப்படையாக அறிவித்துதான் நான் பதிவு திருமணம் செய்து கொண்டேன்.
ஆதீன மடாதிபதியாக திருமணம் ஆனவர்களும் இருந்துள்ளனர். நான் யாரிடமும் எதையும் மறைக்க
விரும்பவில்லை. நான் திருமணம் செய்துள்ள ஹேமா ஸ்ரீ மடத்துக்கு பக்தையாக வந்தவர். இனியும்
அவர் பக்தையாக தொடர்வார். சூரியனார் கோயில் ஆதீனம் சிவாச்சாரியார் மடம் என்பதால் ஏற்கனவே
திருமணமானவர்கள் இங்கே ஆதீனமாக இருந்துள்ளனர்…’’ என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரம் பெரும்
சர்ச்சையான நிலையில் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் உத்தரவின் பேரில், கதிராமங்கலம்
சரக ஆய்வாளர் அருணா, செயல் அலுவலர் சரவணகுமார் ஆகியோர் சூரியனார் கோயில் ஆதீனத்திற்கு
சென்று, அவரிடம் பதிவு திருமணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் திருமணம்
செய்து கொண்டது உண்மை என மகாலிங்க சுவாமி கூறியிருக்கிறார்.
இதையடுத்து ஆதினத்தின்
பதவியை பறித்து அவரை வெளியே அனுப்ப வேண்டும் என்று பக்தர்கள் கொதிப்பு காட்டி வருகிறார்கள்.
சூரியனார் கோயிலுக்கு உள்ள 1500 கோடி ரூபாயை சுருட்டுவதற்காகவே இந்த திருமணம் நடந்திருப்பதாகச்
சொல்லி பக்தர்கள் போராடுகிறார்கள்.