Share via:
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசத்தை எதிர்த்து விளையாட உள்ளது. இன்றைய ஆட்டத்திலும் இந்தியா தனது வெற்றியை தொடருமா என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.
இந்தியாவில் உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் ஒன்றோடு ஒன்று மோதி தங்கள் பலத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது இந்திய அணி பாகிஸ்தான் அணியை 8வது முறையாக வீழ்த்தியதுதான்.
அதன்படி இன்றைய லீக் போட்டியில் இந்திய அணியுடன் வங்கதேச அணி மோதுகின்றது. இன்று பிற்பகல் 2 மணியளவில் புனேவில் தொடங்கும் இப்போட்டியைக் காண ரசிகர்கள் ஒன்று திரண்டு வந்து இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த உள்ளனர். இதனால் மைதானத்தில் அதிகளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியா 3 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்ற பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. வங்கதேசம் 3 போட்டிகளில் விளையாடி, ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று 7வது இடத்தில் உள்ளது. இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் வங்கதேசத்தை வென்று வெற்றியை தொடர வேண்டும் என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

