News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இன்று ஒரே நாளில் 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ள இந்தியா ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளது.


இன்று நடைபெற்ற வில்வித்தை பெண்கள் காம்பவுட் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணம், அதிதி கோபிசந்த் சுவாமி மற்றும் பர்னீத் கவுர் ஆகியோர் அடங்கிய அணி தங்கப்பதக்கத்தை வென்றது. தன்னை எதிர்த்து விளையாடிய சீன தைபேயை விட இந்திய அணி 230க்கு 229 என்ற கணக்கில் அபார சாதனயை படைத்துள்ளது.


இன்றைய போட்டியான ஸ்குவாஷ்  கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பாக தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால் சிங், மலேசியாவைச் சேர்ந்த அஸ்மான் ஐஃபா மற்றும் முகமது சயாபிக் ஜோடியை எதிர்க் கொண்டது. இதில் முதல் மற்றும் இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி 11 புள்ளிகள் என்ற வீதத்தில் முன்னிலை வகித்து முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.



மேலும் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான காம்பவுண்டு வில்வித்தை இறுதிப்போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. பிரவீன் ஓஜஸ், அபிஷேக் ஷர்மா மற்றும் பிரதமேஷ் ஜவகர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, தங்களை எதிர்த்து விளையாடிய தென்கொரியாவை 235க்கு 230 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.


ஒரு நாளைக்கு ஒரு தங்கப்பதக்கம் என்று வென்று வந்த இந்தியா இன்று ஒரு நாள் மட்டும் 3 தங்கப்பதக்கங்களை வென்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link