Share via:
இந்தியா- பாகிஸ்தான் போட்டி! அகமதாபாத் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!
உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் 12வது லீக் போட்டி நடைபெற உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை இருக்கை நுனிக்கே கொண்டு வந்துவிடும். அதன்படி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற உள்ள இன்றைய போட்டியில் இந்தியா& பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 2 அணிகளும் உலகக்கோப்பை போட்டிகளில் தங்களது 3 போட்டிகளை வெற்றி பெற்று சமபலத்துடன் உள்ளது.
இருப்பினும் உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி 7 முறை வெற்றி பெற்றுள்ளது. அதே நிலை இன்றைய போட்டியில்நீடித்து 8வது வெற்றியை இந்தியா பதிவு செய்யும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இப்போட்டியைக் காண ரசிகர்கள் குவிந்து வருவதால் குஜராத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மற்றும் இவர்களுடன் தேசியபாதுகாப்புப் படை, பேரிடம் மீட்புக்குழுவினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் போட்டி நடைபெறும் நரேந்திர மோடி மைதானத்தை சுற்றிலும் அதிகளவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மொத்த அகமதாபாத்தும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.