News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ஆசிய விளையாட்டு போட்டியில் வில்வித்தையில் இந்தியா தங்கப்பதக்கத்தை வென்று தங்கப்பட்டியலில் 19வது தங்கத்தை பெற்று பதக்க மழையில் நனைந்து வருகிறது.


சீனாவின் ஹாங்கோவ் நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டு போட்டியில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.


தொடக்கத்தில் இருந்தே இந்திய விளையாட்டு வீரர்கள் சிறப்பாக விளையாடி தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று தங்களுடைய முந்தைய சாதனைகளை முறியடித்து வருகின்றனர். 


அந்த வகையில் இன்று நடைபெற்ற வில்வித்தை பெண்கள் காம்பவுட் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணம், அதிதி கோபிசந்த் சுவாமி மற்றும் பர்னீத் கவுர் ஆகியோர் அடங்கிய அணி தங்கப்பதக்கத்தை வென்றது. தன்னை எதிர்த்து விளையாடிய சீன தைபேயை விட இந்திய அணி 230க்கு 229 என்ற கணக்கில் அபார சாதனயை படைத்துள்ளது.


இந்தியா இதுவரை 19 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலப் பதக்கங்கள் என பதக்கப்பட்டியலில் தொடர்ந்து 4வது இடத்தில் நீடித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link