News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ஆசிய விளையாட்டு போட்டிகளில் வித்வித்தை கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியா தங்கப்பதக்கத்தை வென்று சாதனை புரிந்துள்ளது.


சீனாவின்  ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர்களும், வீராங்கனைகளும் தங்களின் நாட்டின் பெருமையை காக்க அபாரமாக விளையாடி வருகின்றனர்.


இந்நிலையில் வில்வித்தை கலப்பு இரட்டையர் காம்பவுண்ட் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. ஜோதி சுரேகா வெண்ணாம், பிரவீன் ஓஜஸ் ஆகியோர் தங்களை எதிர்த்து விளையாடிய கொரிய அணியை 159க்கு 158 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றனர்.


பதக்கப்பட்டியலில் இந்தியா இதுவரை 16 தங்கம், 26 வெள்ளி, 29 வெண்கள் என மொத்தம் 71 பதக்கங்களை பெற்றுள்ளது. அதாவது இதுவரை இல்லாத அளவுக்கு ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா அதிக பதக்கங்களை பெற்றுள்ளது அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கம் தரும் வகையில் அமைந்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link