Share via:
ஒரு நாள் உலகக்கோப்பை 12வது லீக் போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மதியம் ஆரம்பமானது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட்டை முகமது சிராஜ் தட்டித்தூக்கி வெற்றிக்கான முதல் படியை தொடங்கி வைத்தார்.
தொடக்க வீரர்களான அப்துல்லா ஷபீக், இமாம் உல் ஹக் இருவரும் ஜோடி போட்டு ஆடத்தொடங்கிய« பாது அப்துல்லா ஷபீக் 20 ரன்களில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன் பின்னர் கேப்டன் பாபர் அசாம் நிதானமாக விளையாடி 36 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியா ஓவரில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவட் ஆகி பெவிலியன் திரும்பினார். அரை சதம் அடிப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட முகமது ரிஸ்வான் போல்ட் ஆகி ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தார்.
அடுத்தடுத்த பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பாகிஸ்தான் வெற்றிக் கனவை தூள்தூளாக்கினார்கள். 42.5 ஓவர்களில் 191 ரன்களை எடுத்த பாகிஸ்தான் இந்தியாவுக்கு 192 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது.
டெங்கு காய்ச்சல் காரணமாக ஓய்வில் இருந்த சுப்மன்கில் இன்றைய போட்டியில் களமிறங்கியது இந்திய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஆனாலும் 4 பவுண்டரிகளை கொடுத்துவிட்டு 16 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா இருவரும் நிதானமாக விளையாடி தன்னுடைய 36வது பந்தில் ரோகித்சர்மா அரை சதம் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
ரோகித் சர்மா 86 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் 300 சிக்சர்களை ஒருநாள் போட்டியில் அடித்து விளையாடிய முதல் இந்தியர் என்ற பெருமையை ரோகித்சர்மா தனக்கென சொந்தமாக்கினார்.
மறுபுறம் விளையாடிக் கொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி 63 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். அதன்படி இந்திய அணி 3 விக்கெட்டைஇ ழந்து 192 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தான் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்து முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை 3 போட்டிகளில் 2 வெற்றியும், ஒரு தோல்வியும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.