Share via:
இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி மக்களுக்கு எக்ஸ் பக்கம் வாயிலாக புது கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
ஆகஸ்டு 15ம் தேதி இந்தியா தனது 78வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. வியாழக்கிழமை சுதந்திர தினம் வருவதை முன்னிட்டு அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார், அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு முக்கிய வேண்டுகோள் முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘இந்த ஆண்டு (2024) சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். இதன் மூலம் அந்நாளை மறக்க முடியாத நாளாகவும், மக்களுக்காக இயக்கமாகவும் மாற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார். என்னுடைய சுயவிவர படத்தை (தேசியக்கொடியாக) நான் மாற்றியுள்ளேன். அதே போல் மக்கள் அனைவரும் தங்களின் சுயவிவர படத்தை (வாட்ஸ் ஆப், இன்ஸ்டா உள்ளிட்ட சமூகவலைதளங்களில் உள்ள டி.பி.) அனைவரும் மாற்றும்படி பிரதமர் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் தேசியக் கொடியுடன் சேர்ந்து செல்பி எடுத்து அதனை https://harghartiranga.com என்ற வலைதளத்தில் வெளியிடுமாறும் பிரதமர் நரேந்திரமோடி மக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ள பதிவு தற்போது வைராகி வருகிறது.