News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சென்னையில் இன்று அதிகாலை முதல் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வரி ஏய்ப்பு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பது குறித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக வருமானவரித்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

அந்த வகையில் பிரபல மருந்து வணிக நிறுவனமான கவரிலால் பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனம் மற்றும் அதற்கு தொடர்புடைய மற்றும் சொந்தமான பல இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

அதன்படி வேப்பேரி, பூக்கடை, வில்லிவாக்கம், மாதவரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சௌகார்பேட்டை ஸ்டார்ட்டன் முத்தையா முதலி தெருவில் அமைந்துள்ள தொழிலதிபர் ஒருவர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மாதவரம் நடராஜன் நகரில் தனியார் குடோன், எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் இந்த சோதனை நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் ஆயிரம் விளக்கும், எழும்பூர், மண்ணடி, தாம்பரம், குன்றத்தூர் பகுதிகளில் அமைந்துள்ள ஸ்டீல் கம்பெனிக்கு சொந்தமான இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 

வருமானவரித்துறை அதிகாரிகளின் அதிகாலை சோதனையால் சென்னை நகரமே ஆட்டம் கண்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link