News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இன்று மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து 8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய வருமான வரி முறையின்படி 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது, பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

வழக்கம் போல் தமிழகத்துக்கு உருப்படியான திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதேநேரம் ஆட்சியைக் காப்பாற்றி வரும் பீகாருக்கு நிறைய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலங்களில் புதிதாக 100 விமான நிலையங்கள் உருவாக்கப்படும் என்றும் பீகாரில் 3 கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.  புற்றுநோய், இன்னும் பிற அரிதான நோய்களுக்கான 36 வகையிலான உயிர் காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதே வேளையில் உயிர்காக்கும் 6 மருந்துகளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

லித்தியம் பேட்டரிகளுக்கு சுங்கவரியில் இருந்து முழுமையான விலக்கு. பின்னலாடைகளுக்கு இறக்குமதி வரியில் சலுகை. தோல் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க தோல் இறக்குமதிக்கு வரிச் சலுகை. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை நீட்டிக்கப்படுகிறது. ஐஐடி, ஐஐஎஸ்சி உயர் கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்காக 10 ஆயிரம் ஃபெலோஷிப்கள் வழங்கப்படும்.

: வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். பருப்பு உற்பத்தியை அதிகரிக்க சிறப்பான சாகுபடியை தரும் விதைகள் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும். பருத்தி உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும். பிஹாரில் மக்கானா (தாமரை விதை) உற்பத்திக் கூடம் அமைக்கப்படும்

கிசான் கடன் அட்டை மூலம் 7.7 கோடி விவசாயிகள் குறுகிய கால கடன்பெற நடவடிக்கை எடுக்கப்படும். கிசான் கடன் அட்டை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனின் உச்ச வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெற 6 ஆண்டு கால சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். பிஹாரில் தேசிய உணவு பதப்படுத்துதல் மையம் (நிஃப்டம் – NIFTEM) அமைக்கப்படும்.

பட்டியல், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பெண்களுக்கு, புதிதாக தொழில்முனைவோருக்கு ரூ.2 கோடி வரை கடனுதவி வழங்கப்படும். காலணி மற்றும் தோல் துறையைப் பொருத்தவரையில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். பொம்மை உற்பத்தித் துறையில் இந்தியாவை அந்தச் சந்தைக்கான சர்வதேச மையமாக்கும் வகையில் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

நாடு முழுவதும் ஐஐடி கல்வி நிறுவனங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். ஐஐடி பாட்னா விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் கூடுதல் மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும். நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் 10,000 சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும். ஜல்ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிக்கப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவை கல்வியில் ஊக்குவிக்கும் வகையில் ரூ.500 கோடி முதலீட்டில் ஒரு மையம் உருவாக்கப்படும்.அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் ‘அடல் ஆய்வகங்கள்’ அரசுப் பள்ளிகளில் உருவாக்கப்படும். தேசிய திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். காப்பீட்டுத் துறைகளுக்கான அந்நிய நேரடி முதலீட்டுக்கான வரம்பு 100 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இந்தியாவின் குணமாகுங்கள்’ ஹீல் இன் இந்தியா (Heal in India) பிரச்சாரம் முன்னெடுக்கப்படும். பொருள் விநியோகம் செய்யும் டெலிவரி பணியில் உள்ள ஊழியர்களுக்கு மின்னணு அடையாள அட்டை வழங்கப்படும். அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் அடுத்த மூன்றாண்டுகளில் புற்றுநோயாளிகளைப் பராமரிக்கும் வகையில் ’டே-கேர் கேன்சர் மையங்கள்’ அமைக்கப்படும். இவற்றில் 200 மையங்களில் 2025 – 26 ஆண்டிலேயே அமைக்கப்படும்.’’ என்று அறிவித்து வருகிறார்.

12 லட்சம் புதிய வருமான வரியில் விலக்கு நல்லது என்றாலும் வெறும் 10% – 15% மக்கள் மட்டுமே பயனடைவர். இதுவே பெட்ரோல் வரியையோ, பிற வரியையோ குறைத்திருந்தால் தான் 80 – 90% மக்கள் பயனடைவார்கள் என்று விமர்சனம் செய்கிறார்கள். தமிழகத்தையும் கொஞ்சம் கவனிங்க மேடம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link