Share via:
தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின்
எம்.பி. சு.வெங்கடேசனே மதுரையில் சட்டவிரோதமாக இயங்கும் கல் குவாரி குறித்து வெளிப்படையாக
புகார் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தான் ஆச்சர்யம்.
இது குறித்து மதுரை எம்.பி. வெங்கடேசன், மதுரை- வாடிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட
கொண்டையம்பட்டி கிராமத்தில் சுற்றுச்சூழல் மற்றும் சிறு கனிம சுரங்க விதிகளுக்குப்
புறம்பாகவும், அனுமதியே இல்லாமலும் பாறைகளை வெட்டியெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாகவும் இங்கு குவாரிப் பணிகள் நடப்பதால் சுற்றுச்சூழலுக்கும்,
கானுயிர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இப்பணிகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதோடு,
அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீரழிவும் ஏற்படும். ஊடகங்கள் இது குறித்து செய்திகள்
வெளியிட்ட பின்பும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. இங்கு நடைபெற்றுள்ள
சட்டவிரோதக் குவாரி நடவடிக்கைகள் மீது தமிழக அரசு முழுமையாக ஆய்வு செய்து சட்டப்படியான
நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இதற்கு தமிழக அரசிடம் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தரராஜன், ‘’தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை எல்லாம்
பாழாக்கி எந்த மாதிரியான கட்டுமானங்களை நாம் உருவாக்கப்போகிறோம்? எதிர்கால தலைமுறைகளுக்கு
சொந்தமான எதையும் அழிப்பதற்கான உரிமை யாருக்கும் கிடையாது. சட்டத்திற்கு
புறம்பாக செயல்படும் இந்த குவாரிகளை தமிழ்நாடு அரசு சீல் வைக்கவேண்டும், இத்தகைய செயலை
செய்யக்கூடிய எல்லோரையும் கைது செய்யவேண்டும், இந்த “வளக் கொள்ளையர்களுக்கு”
பின்புலமாக யார் இருந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். செய்வீர்களா
முதல்வரே’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
டன்ஸ்டன் போன்று மீண்டும் ஒரு போராட்டம் நடந்தால் மட்டுமே தீர்வு
கிடைக்குமா?