Share via:

அரசியலில் நாங்கள் மற்ற கட்சி மாதிரி இயங்க மாட்டோம். எங்க ரூட்டே
தனியாக இருக்கும். என்று தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கும் நேரத்தில் மிகப்பெரிய பில்டப்
கொடுத்தார் நடிகர் விஜய். அவர் மற்ற அரசியல் கட்சிகளைப் போலவே குல்லா போட்டுக்கொண்டு
இப்தார் கஞ்சி குடிப்பதற்குத் தயாராகி இருப்பதைப் பார்த்து அவரது ரசிகர்களே கொதிக்கிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் 7ம் தேதி ஒய்.எம்.சி.ஏ. அரங்கில்
இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் இஸ்லாமியப்
பெருமக்களுடன் நடிகர் விஜய் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார். சிறுபான்மையினர்
வாக்குகளை அள்ளுவதற்காகவே விஜய் இப்படியொரு முயற்சியில் இறங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
இது குறித்துப் பேசும் விஜய் ரசிகர்கள், ‘’நடிகர் விஜய் கட்சி
தொடங்கிய காலத்திலேயே தி.மு.க. பக்கம் இருக்கும் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவ வாக்குகளைப்
பிரிக்கவே தொடங்குகிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால், விஜய் எல்லோருக்கும் பொதுவானவராகவே
இருப்பார் என்று நினைத்தோம். ஆனால், இந்து பண்டிகைகள் குறித்து எவ்வித ஆர்வமும் காட்டாத
விஜய் இஸ்லாம் பண்டிகையை மற்ற அரசியல்வாதிகள் போலவே கொண்டாட இருக்கிறார். இதை பார்த்தால்
அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மையோ என்று தோன்றுகிறது. அனைத்து மதத்தைச்
சேர்ந்தவர்கள் பண்டிகைகளிலும் விஜய் கலந்துகொள்ள வேண்டும் அல்லது அனைத்துப் பண்டிகைகளையும்
நிராகரிக்க வேண்டும்’’ என்கிறார்கள்.
இதற்கு விஜய் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், ‘’விஜய்க்கு இதில்
பெரிதாக உடன்பாடு இல்லை. ஆனால், பிரசாந்த் கிஷோர் கொடுத்த அழுத்தத்தின் பேரிலே கலந்துகொள்கிறார்.
இந்த விழாவுக்கு பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜூனா ஆகிய யாரையும் கூட்டிச் செல்ல மாட்டார்கள்.
அவர் தனியே நின்று ஸ்கோர் செய்வார்’’ என்கிறார்கள். பார்க்கலாம்.