விஜய்க்கு எதிராக சீமான் கடுமையான விமர்சனம் முன் வைத்த பிறகும் விஜய், ‘யாரையும் கண்டுக்காதீங்க’ என்று கூறிவிட்டார். ஆனாலும், விஜய் ரசிகர்கள் ஆங்காங்கே சீமான் எதிர்ப்பைக் கையிலெடுத்து வம்பிழுத்து வருகிறார்கள். சீமானை எதிர்த்து போஸ்டர் அடிக்கிறார்கள். இதையடுத்து சீமானின் ஆட்களும் மீண்டும் விஜய்யுடன் மல்லுக்கட்டுகிறார்கள்.

’’ஸ்டாலின் துண்டுச்சீட்டு என்றால் விஜய் ஏ4 சீட்டு’’ என்று நாம் தமிழர்கள் விஜய்யை கிண்டல் செய்துவரும் நிலையில் சாட்டை துரைமுருகன், ‘’ அம்பேத்கரை கொள்கைத் தலைவராக ஏற்ற விஜய், கொள்கையைக் கூட பார்த்து படிக்கிறதெல்லாம் அரசியலா ப்ரோ ! வாட் ப்ரோ திஸ் இஸ் ராங் ப்ரோ !’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதேபோன்று இடும்பாவனம் கார்த்தி, ‘’அண்ணல் அம்பேத்கரையும், பெரியாரையும் கொள்கை வழிகாட்டி எனக் கூறும் விஜய் அவர்கள், தனது கட்சியின் கொள்கையில் சாதி ஒழிப்பு என்பதைப் பெயரளவில்கூட வைக்காது, தீண்டாமை ஒழிப்பு என மேல்பூச்சு பூசுவதேன்? தீண்டாமை ஏறக்குறைய ஒழிந்துவிட்டது. ஆனால், சாதி இன்னும் இறுக்கம்பெற்று வலுவாகியிருக்கிறது. தீண்டாமை என்பது கிளை போல; சாதிதான் வேர். வேரைவெட்டாது கிளையை வெட்டுவேன் என்பது சரியானதுதானா? கஷ்டம் ப்ரோ

தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமைச்சிக்கல்களில் முதன்மையானவை காவிரி நதிநீர், முல்லைப்பெரியாறு, பாலாறு ஆகியவையாகும். இம்மூன்று நதிநீர்ச்சிக்கல்களும் முறையே கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களுடன் தொடர்புடையவை. இம்மூன்று சிக்கல்கள் குறித்தும் தவெக தலைவர் விஜய் அவர்கள் தனது தீர்மானங்களிலோ, பேச்சிலோ எங்கும் குறிப்பிடவில்லை.

விஜய்யின் கடைசி (?) படத்திற்கு முன்பு, இதுகுறித்து வாய்திறக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. காவிரி நதிநீர் உரிமையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்துப் பேசினால், கர்நாடகாவில் விஜய்யின் கடைசிப்படம் ஓடாது; முல்லைப்பெரியாறு உரிமை குறித்துப் பேசினால் கேரளாவில் படம் ஓடாது; பாலாறு குறித்துப் பேசினால் ஆந்திராவிலும் சிக்கல். அரசியல் தெரிகிறதோ இல்லையோ, இது அவருக்கு நன்றாகத் தெரியும். அதனை அறிந்துதான் காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு குறித்துப் பேசாது கடந்துபோகிறார் விஜய். சிறப்பு ப்ரோ! இப்டித்தான் அரசியல் பண்ணனும்…’’ என்று தொடர்ந்து அடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த ஆட்டம் எங்கே போய் முடியப்போகுதோ..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link