News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பெரியாரைக் கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டவர் விஜய். அதனாலே பெரியாரைப் பற்றி சீமான் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். சீமானின் பெரியார் வெறுப்புக்கு விஜய் ஒருபோதும் கண்டனம் தெரிவித்தது இல்லை. இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் பெரியாரைப் பற்றி கண்டனம் தெரிவித்ததும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

பெரியார் பேச்சுக்கு விஜய், ‘’பெரியார், தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனச் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் அவர்களுக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்காமல் இருக்கலாமே? முரண்களைக் கடந்து எங்கள் கொள்கைத் தலைவரான பெரியாரைத் தமிழ்நாடு இன்றும் ஏன் போற்றுகிறது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன!? குழந்தைத் திருமணத்தை எதிர்த்ததால், விதவை மறுமணத்தை ஆதரித்ததால், சாதிக் கொடுமைகளை எதிர்த்ததால் எனச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், இன்றைய நிலையுடன் பொருத்திப் பார்த்துச் சொன்னால், இன்று எல்லோரும் கேட்கும் சமூக நீதிக்கான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நூறாண்டுகளுக்கு முன்பே கேட்டவர் என இன்னும் அவரைப் போற்றுவதற்கான பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். ஒன்றிய அரசின் மீதான விமர்சனங்களை மறைப்பதற்குக் கூடப் பெரியார் தொடர்பான சர்ச்சையைக் கிளப்பும் அளவுக்கு வலுவானவராக இன்றும் பெரியார் இருக்கிறாரே… இது போதாதா?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதையடுத்து விஜய் ரசிகர்கள், ‘’பெரியார் மீது கை வைத்தால் அது தளபதி விஜய்யின் மீது கை வைத்ததைப்போன்றது… தளபதி விஜய் மீது கை வைத்தால் அது அவர் பின் நிற்கும் கோடிக்கணக்கான தமிழர்களின் மீது கை வைத்ததைப்போன்றது…’’ என்று பாராட்டித் தள்ளுகிறார்கள்.

அதேநேரம் நாம் தமிழர் கட்சியினரோ, ‘’பிஜேபி’க்கு கண்டனம் தெரிவிக்கும் விஜய் அண்ணன் சீமானுக்கு கண்டனம் தெரிவிக்கல ஏன்னா, விஜய்க்கு தெரியும் அண்ணன் சீமான் பொளந்து விட்ருவாருன்னு… தைரியம் இருந்தா மோதிப் பாரு. விஜய்க்கு இருக்கும் பயம் அவரது ரசிகர்களுக்கும் இருக்க வேண்டும். பெரியாரை சீமான் இன்னமும் அதிகமாக பொளந்து கட்டுவார்’’ என்று சண்டைக்கு இழுக்கிறார்கள்.

விஜய் இதற்கும் பதில் சொல்வாரா..?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link