Share via:
மதுரையில் திருநீறு அழித்து சர்ச்சையில் சிக்கிய திருமாவளவன் மீண்டும்
இந்துக்களிடம் மோதும் வகையில் அடுத்த சர்ச்சையைத் தொடங்கி வைத்திருக்கிறார். திருமா
பேசுகையில், ‘’”முருகன் தமிழ் கடவுள் என்றால் சிவனும், பார்வதியும் தமிழ் கடவுளாகத்தானே
இருக்க முடியும்? கணேசன் மட்டும் ஏன் தமிழ் கடவுளாக இல்லை..?” இதை கேட்டால் அவர்களுக்கு
கோவம் வருகிறது. ஏன் முருகனுக்கு வேறு எங்கேயும் வழிபாடு இல்லை’’ என்று லாஜிக்காக கேள்வி
எழுப்பியிருக்கிறார்.
இதையடுத்து திருமாவளவன் மீது இந்து முன்னணி ஆட்களும் பாஜகவினரும்
பாய்ந்துவருகிறார்கள். இதுகுறித்து பாஜகவின் நாராயணன் திருப்பதி, “முருகன் தமிழ்
கடவுள் என்றால் சிவனும், பார்வதியும் தமிழ் கடவுள் தான, கணேசன் மட்டும் ஏன் தமிழ் கடவுளாக
இல்லை? அவர்கள் கைலாயத்தில் இருப்பவர்களாக இருந்தால், கைலாய மலையும் தமிழனுக்கு சொந்தம்
தானே? – எங்களை மட்டும் ஏன் அசிங்கப்படுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். நான் லாஜிக்கா
பேசினா ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இது போன்ற கதைகள் எல்லாம் வேறு மதத்தில் இல்லையே,
இந்த கதையாடல்கள் வேறு மதத்தில் இல்லையே, இருந்தால் சொல்லுங்கள், நான் பேசுகிறேன்.
அம்பேத்கரின் பிள்ளையாக இருந்து கொண்டு எப்படி வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியும்,
பெரியாரின் பிள்ளையாக இருந்து கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியும்? என்று
தொல். திருமாவளவன் கேட்டிருக்கிறார்.
அம்பேத்கர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர் என்பதால், அம்பேத்கரின் பிள்ளை
திருமாவளவனும் மகாராஷ்டிராவை சேர்ந்தவர் என்றால் ஏற்றுக் கொள்வீர்களா? மகாராஷ்டிராவை
சேர்ந்தது தான் தமிழ்நாடு என்று சொல்வீர்களா? பெரியார், தி கவை சேர்ந்தவர் என்பதால்,
அவரின் பிள்ளை திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியை கலைத்து விட்டு, தி க வில்
சேர்ந்து விட வேண்டியது தானே என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? இதெல்லாம் ஒரு லாஜிக்கா?
எல்லா மதத்திலும் கதைகள் இருக்கின்றன, ஆனால் அவற்றை விமர்சித்தால் அவர்கள் பொறுத்துக்
கொள்ள மாட்டார்கள், சகித்துக் கொள்ள மாட்டார்கள் என்றும், விமர்சித்தால் விளைவுகள்
பயங்கரமாக இருக்கும்’’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.
இந்து முன்னணியினர், ‘’கணேசன் தெய்வமல்ல அது ஒரு மெய்யில் தத்துவம்
அது சிவனின் கண்டுபிடிப்பு ஆகையால் வினாயகருக்கு சிவன் தந்தை. தாயின் கருவறையில் பிறந்த
தெய்வங்களுக்கு மட்டுமே கோவிலில் கருவறை உண்டு வினாயகருக்கு கருவறை என்பது எங்கேயும்
கிடையாது’’ என்று புதுசுபுதுசாக விளக்கம் சொல்கிறார்கள்.