சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என்.சீனிவாசன், சஷாங்க் மனோகர் ஆகியோர் பதவி வகித்திருக்கும் நிலையில், ஐந்தாவது இந்தியராக பா.ஜ.க.வின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளது கடும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்ட நேரத்திலேயே அதிகாரத்தின் மூலம் அந்த பதவிக்கு வந்ததாக எதிர்ப்பு நிலவியது. இந்த நிலையில், ஐ.சி.சி. சேர்மனாகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

தற்போது ஐசிசி சேர்மேனாக இருக்கும் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரெக் பார்கலே தன்னை மூன்றாவது முறையாக இந்தப் பதவிக்கு நியமனம் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். அவரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ஐசிசி தலைவர் பதவிக்கான தேர்வு நடைபெற இருக்கிறது.

ஆகஸ்ட் 27ம் தேதிக்குள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இந்த பதவிக்கு விண்ணப்பிக்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி தலைவர் பதவியைப் பொறுத்தவரை இரண்டு ஆண்டுகள் என்ற அடிப்படையில் மூன்று முறை தொடர்ச்சியாக பதவி வகிக்க முடியும். கிரெக் பார்கலே இதன்படி இரண்டு முறை என நான்கு வருடங்கள் ஐசிசி சேர்மேனாக இருந்துவிட்டார். 

இன்னும் இரண்டு ஆண்டுகள் இந்த பதவியில் தொடரலாம் என்றாலும், தன்னை மூன்றாவது முறை நியமனம் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டிருக்கிறார். ஜெய் ஷாவைப் பொறுத்தவரை தற்போது பிசிசிஐ செயலாளராக மட்டுமில்லாமல் ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகாரங்கள் துணைக் குழுவின் தலைவராக உள்ளார். அவருக்கு ஐசிசியில் பரந்துபட்ட அனுபவம் மற்றும் தொடர்புகள் உள்ளதால் போட்டியின்றி இந்த பதவிக்கு ஜெய் ஷா தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜெய் ஷா ஐசிசியின் தலைவராக பொறுபேற்கும்பட்சத்தில் இந்திய கிரிக்கெட் வாரியமும் கூடுதல் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஐசிசி மூலம் இந்தியாவுக்கு வருவாய் என்பதை சரியாக பங்கீடு செய்து கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதேபோல் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஏற்ப போட்டித் தொடர்கள் தீர்மானிப்பதிலும் சிக்கல் இருக்கிறது. இதனையெல்லாம் ஜெய்ஷா ஐசிசி தலைவராக இருக்கும்போது தீர்த்துக் கொள்ள இப்போது நல்ல சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

ராகுல் காந்தி இதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பாரா அல்லது ஆதரவு தெரிவிப்பாரா என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link