வன்னியர் சங்கத் தலைவரை கொலை செய்வோம் என்று பொதுவெளியில் மிரட்டல் விடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்கு எதிராக கடலூர் மாவட்டத்தில் பல போராட்டங்களை நடத்தியது டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி. இந்த நிலையில் பா.ம.க. சிறுமியின் வன்முறைப் பேச்சு வீடியோவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வைரலாக்கி வருகிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை கழுத்தில் போட்டிருக்கும் சிறுமியிடம் உங்களுடைய கட்சி எது, தலைவர் யார் என்றெல்லாம் ஒருவர் கேட்கும்போது, ‘பாட்டாளி மக்கள் கட்சி, டாக்டர் ராமதாஸ், அன்புமணி’ ஆகியோர் பெயரைச் சொல்கிறது. அதோடு கொடியின் நிறம் மற்றும் மாம்பழச் சின்னம் ஆகியவற்றைச் சொல்கிறது.

அடுத்து யாராவது அய்யாவை தப்பா பேசினா என்ன செய்வ என்று கேள்வி கேட்டதும், ‘கத்தி எடுத்து கழுத்தை அறுத்துடுவேன்’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது. இந்த வீடியோவை வைரலாக்கிவரும் வீடியோ சிறுத்தைகள், ‘’குழந்தைகளுக்கு அதுவும் பெண் குழந்தைகளுக்கு இப்படி பாடம் சொல்லித்தரும் கல்விப்பணி தொடரட்டும். பெருந்தமிழர் டாக்டர் ராமதாஸ்க்கும் அன்புமணி ராமதாஸ்க்கும் பாராட்டுகள். இந்தக் குழந்தைக்கு  தமிழக காவல் துறை சார்பில் பாராட்டு விழா நடத்த வேண்டும்’’ என்று கிண்டலாகக் கோரிக்கை வைக்கிறார்கள்.

சிறுவர், சிறுமிகளை வைத்து இப்படி வன்முறை வீடியோ வெளியிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், இதே போல் இன்னும் பல வீடியோக்கள் வெளியாகும். எனவே, சீக்கிரம் காவல் துறை விழித்துக்கொள்ளட்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link