Share via:
சென்னையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கருத்துகளை முன்வைத்து பேசியுள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உயர்படிப்புக்காக இன்று இரவு இங்கிலாந்து செல்ல உள்ளார் அண்ணாமலை. 3 மாதங்கள் அங்கேயே தங்கியிருந்து உயர்படிப்பை மேற்கொள்ள உள்ள அண்ணாமலை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் குறித்து அவதூறு தெரிவிக்கும் வகையில் பேசியுள்ளார். இதை எதிர்த்து ஒவ்வொரு மாவட்டந்தோறும் அ.தி.மு.க.வினர் அண்ணாமலையின் உருவப்படத்தை எரிப்பதிலும், செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடிப்பதிலும் மும்முரம் காட்டி வருகின்றனர். பிரச்சினையின் தீவிரம் அறிந்த போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி மீதான என்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன். அது 100 சதவீதம் சரியானதுதான். 39 வயது அண்ணாமலை பேசியது தவறு என்றால், 70 வயதான பழனிசாமி பேசியதும் தவறுதான் என்று தனது கருத்தில் நிலையாக உள்ளார்.
மேலும் முதலமைச்சரின் வெளிநாடு பயணம் குறித்து பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே துபாய், ஸ்பெயினுக்கு பயணம் மேற்கொண்ட போது ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இப்பயணங்கள் தோல்வியை தழுவிய நிலையில், தற்போதைய அமெரிக்க பயணம் குறித்தும் விமர்சித்து பல கருத்துகளை தெரிவித்துள்ளார்.