Share via:
பிரதமர் நரேந்திரமோடியின், ‘நான் கடவுள்’ பேச்சு நாடு முழுக்க
பேசுபொருளாகியிருக்கிறது. இந்த விவகாரத்திற்கு ராகுல் காந்தி அவரது பாணியில் சிக்ஸர்
அடித்திருக்கிறார்.
பிரதமர் மோடி, ‘என் அம்மா இருந்தவரை நான் (எல்லாரையும் போல) உடல்-ரீதியில்தான்
பிறந்ததாக நம்பிக் கொண்டிருந்தேன். அம்மா காலமானதற்குப் பின்னால் என் வாழ்வின் அனுபவங்களை
எல்லாம் சேர்த்துப் பார்க்கும் போது எனக்கு ஒரு விஷயம் தெளிவாகியது. என்னை இந்த பூமிக்கு
இறைவன் நேரடியாக அனுப்பி இருக்கிறான். இந்த பூமியில் என்னை வைத்து இறைவன் சில காரியங்களை
சாதித்துக் கொள்ள வேண்டி இருந்திருக்கிறது. எனவே நேரடியாக அனுப்பி வைத்திருக்கிறான்.’
பேசினார்.
தாங்கள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லது இறைவன் மூலம்
அனுப்பப்பட்டவர்கள் என்று நம்புபவர்களுக்கு உளவியல் குறைபாடு இருக்க வாய்ப்பு இருக்கிறது,
கவுன்சிலிங் செய்துகொள்ள வேண்டியது அவசியம் என்று மனநல மருத்துவர்கள் கூறிவரும் நிலையில்,
இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி பேசியிருப்பது தீயாய் பரவுகிறது.
இது குறித்து ராகுல்காந்தி, ‘நமது காங்கிரஸ் வேட்பாளர் கன்னையா
குமார் ஒரு மிகச் சிறந்த அறிவாளி. பல்வேறு தலைப்புகளில் ஆழமான அறிவு கொண்டவர். அப்பேர்ப்பட்ட
கன்னையா குமார் ஒரு நாள் என்னிடம் வந்து, “நான் உயிரியல் ரீதியாக பிறந்தவன் இல்லை
கடவுளால் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டவன்” என்று பேசினால் நான் என்ன பதில் சொல்லி
இருப்பேன்?
நான் இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் வைத்து, “உஷ்…! இதை
வேறு யாரிடமும் சொல்லி விடாதீர்கள். என்னிடம் சொன்னால் கூட சத்தமாக சொல்லி விடாதீர்கள்.
பக்கத்தில் இருப்பவர்கள் இவன் ஒரு பைத்தியம் என்று நினைத்து விடுவார்கள்” என அக்கறையோடு
சொல்லி இருப்பேன்.
ஆனால் பிரதமர் மோடி “நான் உயிரியல் ரீதியாக பிறந்தவன் இல்லை
கடவுளால் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டவன்” என்று கூச்சமில்லாமல் பேசி இருக்கிறார்.
நான் கேட்கிறேன் : கொரானா காலகட்டத்தில் இறந்தவர்களின் உடல்கள் கங்கைக் கரையில் குவியல்
குவியலாகக் கிடந்தபோது, கடவுளால் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்ட இந்த மினி கடவுள், அவர்களுக்கு
உயிர் கொடுத்திருக்கலாமே..!
அதற்கு பதிலாக விளக்கு ஏந்துங்கள், டார்ச் அடியுங்கள், சாப்பாட்டு
பிளேட்டில் கரண்டியால் அடியுங்கள் என்றல்லவா இந்த மினி கடவுள் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார்.
‘இந்த நாட்டு மக்கள் அனைவரும் உயிரியல் ரீதியாக பிறந்தவர்கள். ஆனால் நான் மட்டும் கடவுளால்
நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டவன்’ என்பதுதான் மோடி கட்டமைக்கும் பொய். இதை அவரைத் தவிர
யாராவது நம்புவார்களா’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதேநேரம் பா.ஜ.க.வினரோ, ‘எனக்கு அதிகம் உழைப்பதற்கு கடவுள் சக்தி
கொடுத்திருக்கிறார் என்பதைத் தான் பிரதமர் மோடி அப்படி கூறியிருக்கிறார், அதை திசை
திருப்புகிறார்கள்’ என்று சமாளித்துவருகிறார்கள்.