Share via:

தி.மு.க. மீது மன்னராட்சி என்று கடுமையாக விமர்சனம் வைத்த ஆதவ் அர்ஜூனாவை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று தி.மு.க.வினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதேநேரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ‘’திருமாவளவனின் மனசாட்சியே ஆதவ் அர்ஜூனா என்பதும் திருமா பேச நினைப்பதை ஆதவ் பேசுகிறார். அதனால் நடவடிக்கை எடுக்க மாட்டார்’’ என்று நம்பிக்கொண்டு இருந்தனர்.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு பேசிய விஜய், ‘இன்று கூட்டணி அழுத்தம் காரணமாக திருமாவளவன் இங்கு இல்லை என்றாலும் அவரது மனம் இங்குதான் இருக்கிறது’’ என்று பேசினார். விஜய் பேசியது உண்மை என்பது போலவே அடுத்தடுத்த காட்சிகள் அரங்கமேறுகின்றன.
ஏனென்றால் இந்த மேடையில், ‘’மன்னராட்சி போன்று பிறப்பால் ஒருவர் முதல்வர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது’’ என்று நேரடியாக தி.மு.க.வை ஆதவ் அர்ஜூனா அட்டாக் செய்தார். இதற்கு தி.மு.க.வினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் ‘’ஆதவ் அர்ஜுனா கட்சி பொறுப்பில் நீடிக்கிறார்” என்று அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் புயல் நிவாரண நிதிக்காக முதல்வர் ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டிருந்தார் திருமாவளவன். அது கொடுக்கப்படுவது வேண்டுமென்றே இழுத்தடிக்கப்பட்டது. கூட்டணியா அல்லது ஆதவ் அர்ஜூனா என்று நேரடியாகவே கேள்வி எழுப்பப்பட்டது.
ஆதவ் அர்ஜூனா, கொள்கை ஆகியவற்றை விட தி.மு.க. கூட்டணியே முக்கியம் என்று 6 மாத காலம் ஆதவ்வை நீக்கி நடவடிக்கை எடுத்துவிட்டார். அதேநேரம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு சுயமரியாதை இருக்கக்கூடாதா என்று அவரது கட்சியினர் கலங்கி நிற்கிறார்கள். கொள்கையை விட சீட்டு தான் முக்கியம் என்பதை திருமாவளவன் சுட்டிக் காட்டியிருப்பதையடுத்து அவரது இமேஜ் சரிவை சந்தித்துள்ளது.
இதற்கு பதிலடியாக ஆதவ் பேசத் தொடங்கினால் திருமாவளவன் அம்பலப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது