News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்பாடு செய்துள்ள விருந்தில் கலந்துகொள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகாரஜூன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படாதது அரசியல் களத்தில் பெரும் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது.

ஜி20 மாநாட்டையொட்டி இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தேசிய தலைவர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து அளிக்க உள்ளார்.

இதற்காக பிரத்யேகமாக அச்சிடப்பட்ட அழைப்பிதழ் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பினை ஏற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் விருந்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 

அதேபோல் தேவகவுடா, மன்மோகன் சிங் ஆகியோருக்கு இன்று காலை குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் ஒரு அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. 

அது என்னவென்றால், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு விருந்துக்கான அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த அதிகாரப்பூர்வ தகவலை அவரது அலுவலகம் வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

அனைத்து கேபினெட் மந்திரிகள், மாநில முதல்வர்கள், தொழில் அதிபர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைக்கப்படாதது அவரை அவமானப்படுத்துவதாக உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link