News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தி.மு.க.வுடன் கூட்டணியா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சுவாரசியமான பதிலை வழங்கியுள்ளார்.

 

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

 

சென்னை  எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் உபகரணம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட கமல்ஹாசன் உபகரணத்தை திறந்து வைத்து பேசினார். இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

அப்போது கமல்ஹாசனிடம் செய்தியாளர்களை பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசும்போது, இன்று என் பிறந்தநாள் என்பதை விட மிக முக்கியமான ஒரு நல்ல நாள். நல்லவர்கள் சேர்ந்து நடத்தும் நல்விழா. நாங்கள் எல்லோரும் மனிதர்கள், எங்களை மனிதம் தான் இங்கு ஒன்று சேர்த்துள்ளது என்று தெரிவித்தார்.

 

காற்றின் ஈரப்பதத்தில் இருந்து நீரை தயாரிக்கும் எந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அரசாங்கம் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கமல்ஹாசன் தொடர்ந்து பேசினார்.

 

அப்போது செய்தியாளர்கள் கமல்ஹாசனை பார்த்து, ‘தி.மு.க.வுடன் கூட்டணியா?’’ என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், அரசியல் கடந்து மனிதநேயம் எங்களை இணைத்துள்ளது. எல்லோருக்கும் தனிக்கட்சியும் விசுவாசமும் உள்ளது. ஆனால் மனிதநேயம் முக்கியம் அதுதான் எங்களை இங்கு இணைத்துள்ளது. இது தொடரும்’’ என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link