News

மோடியை வரவேற்பாரா செங்கோட்டையன்..? எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி

Follow Us

ஸ்டாலின் குடும்பத்துக்கு 30 ஆயிரம் கோடி கமிஷன் போகிற்து என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ வெளியிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பரபரப்புக் கிளப்பினார். அதே பாணியில் தமிழகம் வாங்கியிருக்கும் கடன் தொகையில் ஸ்டாலினுக்கு எவ்வளவு கமிஷன் என்று ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்கு அண்ணாமலை மீது பாய்கிறார்கள் தி.மு.க. நிர்வாகிகள்.

தமிழக நிதிநிலை அறிக்கை குறித்து அண்ணாமலை, ‘’இந்த மாதம் 14ஆம் தேதி, வரும் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது. இந்த ஆண்டு நிறைவு பெறும் போது, தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியிருக்கும். கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, அன்றைய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசிய காணொளி ஒன்றை இன்று பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. கமிஷன் அடித்தே 5 லட்சம் கோடிக்கு தமிழகத்தை கடனாளி மாநிலமாக ஆக்கியுள்ளார்கள் என்றீர்கள் அன்று. இன்று மொத்தக் கடன் 9.5 லட்சம் கோடி ரூபாய். நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு, ஸ்டாலின்?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்த விவகாரத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘’2014ஆம் ஆண்டு 55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை தற்போது 2025ஆம் ஆண்டு 181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே, அப்படியென்றால் நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என்று திருப்பிக் கேட்கலாமா ? தமிழ்நாட்டின் மீது உண்மையில் உங்களுக்கு அக்கறை இருந்தால், உங்கள் கட்சியின் அமைச்சர்களிடம் கேட்டு தமிழ்நாட்டிற்கு நிலுவையில் இருக்கும் கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கான நிதியைப் பெற்றுத் தாருங்கள். கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சியை ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை 2025 பாராட்டியிருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் அவதூறை மட்டுமே பரப்புவது உங்களது அரசியல் முதிர்ச்சிக்கான போதாமையையே காட்டுகிறதே தவிர வேறல்ல…’’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

அதேபோல் தி.மு.க.வினர், ‘’கடன் அதிகமாக வாங்கியுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம், என்று அனைத்து பத்திரிகைகளிலும் செய்தி வருகிறது. தமிழ்நாடு கடனில் தத்தளிப்பதாக ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கும் முயற்சி இது. ஒரு மாநிலம் அதன் மொத்த வருவாயில் (GSDP) 29.1% வரை கடன் வாங்கலாம் என்பது 15 வது நிதி கமிஷன் நிர்ணயத்திற்கும் உச்சவரம்பு. தமிழ்நாட்டின் கடன் அதன் GSDP யில் 25.63% மட்டுமே. அதேநேரத்தில், இந்திய ஒன்றிய அரசின் கடன் 181 லட்சம் கோடிகள்.. இது இந்தியாவின் GDP யில் 57.3%….. பாஜக ஆளும் சில மாநிலங்களின் கடன் சதவீதத்தை பார்ப்போம்: ராஜஸ்தான் – 36% உத்தரப்பிரதேசம் – 32.7% மத்தியப்பிரதேசம் – 32% ஆனால், இவர்கள் தான் தமிழ் நாட்டின் கடனை விமர்சிக்கின்றனர்…’’ என்று அண்ணாமலையைக் காட்டமாக விமர்சிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link