News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு முறைப்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதையடுத்து மத்தியில் ஆளும் பா.ஜ.க., மாநிலத்தில் ஆளும் தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்ட், பா.ம.க. என்று எல்லா கட்சியினரும் இந்த வெற்றிக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் நேரடியாகவே, ‘’நான் ஆட்சியில் இருக்கும் அரை ஒருபிடி மண்ணைக்கூட அள்ள விட மாட்டோம் என்று உறுதி கொடுத்தேன். ஏலத்தை முழுமையாக ரத்துச் செய்யும்வரை போராட்டம் தொடரும் என்கிற உறுதிக்கும் முன்னால் பணிந்தது பாஜக. ஒன்றிய அரசின் தந்திரங்களை நம்பாமல் போராடிய மக்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி’’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு தி.மு.க.வினர், ‘’வேதாந்தா நிறுவனத்திற்கு தமிழகத்தின் உறுதி தெரிந்துவிட்டது. தூத்துக்குடி போலவே இங்கேயும் பிரச்னை வரும் என்பதால் பயந்து பின்வாங்கிவிட்டது. இது தளபதிக்குக் கிடைத்த வெற்றி என்கிறார்கள்.

அதேநேரம் அ.தி.மு.க.வினர், ‘’சட்டமன்றத்தில் டங்க்ஸ்டன் விவகாரத்துக்காக எதிர்க்கட்சித் தலைவர் 170 நிமிடம் எதிர்ப்பு தெரிவித்தார். அ.தி.மு.க.வினர் அத்தனை பேரும் ஒன்றுபட்டு குரல் கொடுத்தனர். உயிரைக்  கொடுத்தாவது காப்பாற்றுவோம் என்று போராட்டம் நடத்திய எடப்பாடி பழனிசாமிக்குக் கிடைத்த வெற்றி என்கிறார்கள்.

’’ஆட்சியாளர்களுக்குப் போராட்டம் என்ற மொழி மட்டுமே புரியும். எனவே போராடி வெற்றி பெற்றோம்’’ என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகிறார்கள்.

அதே போல் பா.ஜ.க.வினர், ‘’டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து மத்திய அரசு அறிவிப்பு யார் யாரெல்லாம் சொந்தம் கொண்டாடுகிறார்கள் பாருங்கள். மு.க.ஸ்டாலின், செல்வபெருந்ததை, பூவுலகின் நண்பர்கள், அமைச்சர் மூர்த்தி, கனிமொழி எம்பி, தங்கம் தென்னரசு, சிபிஎம் அருணன், சிபிஐ முத்தரசன், திருச்சி. சிவா என்னென்ன கதை எல்லாம் சொல்றாங்க பாருங்க கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றாங்க. டெல்லிக்கு போய் கடந்த இரண்டு மாதமாக தமிழக பாஜக குறிப்பாக தலைவர் அண்ணாமலை அவர்கள் மந்திரிகளோடு பேசி அதிகாரிகளோடு பேசி பிரதமரோடு பேசி இத்திட்டத்தின் ஏலத்தை ரத்து செய்தால் …. அதற்கான முழு கிரெடிட் மேற்கண்டவர்கள் எடுத்துக் கொள்வார்களாம் ?’’ என்று கிண்டல் செய்கிறார்கள்.

இதற்கு பதில் அளிக்கும் தி.மு.க.வினர், ‘’அண்ணாமலை பேசியதை இன்னமும் மக்கள் மறக்கவில்லை. தூத்துக்குடி மக்களுக்கு காப்பர் மதிப்பு தெரியலை. மதுரை மக்களுக்கு டங்ஸ்டன் அருமை தெரியலை. மக்களுக்கு விளக்கமாக எடுத்துச் சொல்லி புரிய வைத்து சுரங்கம் தோண்ட வேண்டும் என்றார். மக்கள் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றதும் பல்டி அடிக்கிறார்’’ என்கிறார்கள்.  

மக்கள் ஒருங்கிணைந்து போராடினால் எதுவும் சாத்தியம் என்பதற்கு மேலும் ஒரு உதாரணமாக அமைந்தது மதுரை அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்ட விவகாரம். ஆகவே இது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link