Share via:
வாரிசு அரசியல் இந்தியாவில் தலை தூக்கவே முடியாது. வாரிசு அரசியலை
ஒழித்துக் கட்டுவதே எங்கள் முக்கிய இலக்கு என்றெல்லாம் தேர்தல் நேரத்தில் வீரவசனம்
பேசிய பிரதமர் நரேந்திரமோடியில் 20 பேர் வாரிசு அரசியல் மூலம் இடம் பிடித்திருப்பது
தேசிய அளவில் வைரல் ஆகியிருக்கிறது.
அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கூட, ‘எங்கப்பா பேரு
கருணாநிதி இல்லீங்க’ என்று கிண்டல் செய்தார். வாரிசு அரசியல் பேசிக்கொண்டே வாரிசை வளர்க்கிறார்கள்
என்று காங்கிரஸ் கட்சி பட்டியல் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இதோ, அந்த பட்டியல்.
1. எச்.டி.குமாரசுவாமி – ஒன்றிய அமைச்சர், கனரகத் தொழில்கள் அமைச்சகம்.
முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா அவர்களின் மகன்
2. ஜெயந்த் சௌதரி – ஒன்றிய இணையமைச்சர், திறன் மேம்பாடு மற்றும்
தொழில்முனைவோர் அமைச்சகம். முன்னாள் ஒன்றிய அமைச்சர் சௌதரி அஜித் சிங் அவர்களின் மகன்
மற்றும் முன்னாள் பிரதமர் சரண் சிங் அவர்களின் பேரன்.
3. ஜோதிராதித்ய சிந்தியா – ஒன்றிய அமைச்சர், தகவல்தொடர்பு அமைச்சகம்.
முன்னாள் ஒன்றிய அமைச்சர் மாதவ்ராவ் சிந்தியா அவர்களின் மகன்
4. சிராக் பஸ்வான் – ஒன்றிய அமைச்சர், உணவு பதப்படுத்தும் தொழில்கள்
அமைச்சகம். முன்னாள் ஒன்றிய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அவர்களின் மகன்
5. ராம்நாத் தாக்கூர் – ஒன்றிய இணையமைச்சர், விவசாயத்துறை அமைச்சகம்.
முன்னாள் பீகார் மாநில முதலமைச்சர் கர்பூரி தாக்கூர் அவர்களின் மகன்
6. ராவ் இந்தர்ஜீத் சிங் – ஒன்றிய இணையமைச்சர், புள்ளியியல் மற்றும்
திட்ட அமலாக்க அமைச்சகம். முன்னாள் பஞ்சாப் மற்றும் ஹரியானா முதலமைச்சர் ராவ் பிரேந்தர்
சிங் அவர்களின் மகன்
7. ராம் மோகன் நாயுடு – ஒன்றிய அமைச்சர், விமானப் போக்குவரத்து
அமைச்சகம். முன்னாள் ஒன்றிய அமைச்சர் எர்ரன் நாயுடு அவர்களின் மகன்.
8. பியூஸ் கோயல் – ஒன்றிய அமைச்சர், வர்த்தக மற்றும் தொழில்துறை
அமைச்சகம். முன்னாள் ஒன்றிய அமைச்சர் வேத் பிரகாஷ் கோயல் அவர்களின் மகன்.
9. தர்மேந்திர பிரதான் – ஒன்றிய அமைச்சர், கல்வித்துறை அமைச்சகம்.
முன்னாள் ஒன்றிய இணையமைச்சர் தேபேந்திர பிரதான் அவர்களின் மகன்.
10. ஜித்தின் பிரசாடா – ஒன்றிய இணையமைச்சர், மின்னணு & தகவல்
தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம். முன்னாள் அகில
இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ஜிதேந்திர பிரசாடா
11. அனுப்ரியா பட்டேல் – ஒன்றிய இணையமைச்சர், சுகாதாரம் &
குடும்ப நலத்துறை அமைச்சகம் மற்றும் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம். உத்திர
பிரதேச அரசியல்வாதி சோனேலால் பட்டேல் அவர்களின் மகள்
12. ரக்ஷா நிகில் கட்ஸே – ஒன்றிய இணையமைச்சர், இளைஞர் நலம் மற்றும்
விளையாட்டு அமைச்சகம். முன்னாள் மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ஏக்நாத் கட்ஸே அவர்களின்
மருமகள்
13. கமலேஷ் பஸ்வான் – ஒன்றிய இணையமைச்சர், ஊரக வளர்ச்சி அமைச்சகம்.
முன்னாள் உத்திர பிரதேச சட்டமன்ற உறுப்பினர் ஓம் பிரகாஷ் பஸ்வான் அவர்களின் மகன்.
14. ஷாந்தனு தாக்கூர் – ஒன்றிய இணையமைச்சர், துறைமுகங்கள், கப்பல்
போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம். முன்னாள் மேற்கு வங்க மாநில இணையமைச்சர்
மஞ்சுள் கிருஷ்ணா தாக்கூர் அவர்களின் மகன்.
15. கிரண் ரிஜிஜு – ஒன்றிய அமைச்சர், சிறுபான்மையினர் நலத்துறை
அமைச்சகம். முன்னாள் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் தற்காலிக சபாநாயகர் ரிஞ்சின் காரு
அவர்களின் மகன்.
16. ரவ்நீத் சிங் பிட்டு – ஒன்றிய இணையமைச்சர், ரயில்வே அமைச்சகம்
மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம். முன்னாள் பஞ்சாப் முதலமைச்சர் பியன்ட்
சிங் அவர்களின் பேரன்
17. ஜே.பி.நட்டா – ஒன்றிய சுகாதார & குடும்ப நலத்துறை அமைச்சகம்.
முன்னாள் மத்திய பிரதேச அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான ஜெயஸ்ரீ பேனர்ஜி அவர்களின்
மருமகன்
18. கிர்த்தி வர்தன் சிங் – ஒன்றிய இணையமைச்சர், வெளியுறவுத்துறை
அமைச்சகம். முன்னாள் உத்தரப் பிரதேச அமைச்சர் மகாராஜ் ஆனந்த் சிங் அவர்களின் மகன்
19. அன்னப்பூர்ணா தேவி – ஒன்றிய அமைச்சர், பெண்கள் மற்றும் குழந்தைகள்
மேம்பாட்டு அமைச்சகம். முன்னாள் பீகார் மாநில சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பிரசாத் யாதவ்
அவர்களின் மனைவி.
20. விரேந்திர குமார் காதிக் – ஒன்றிய அமைச்சர், சமூகநீதி நலத்துறை
அமைச்சகம். முன்னாள் மத்திய பிரதேச அமைச்சரான கௌரி ஷங்கர் ஷெஜ்வர் அவர்களின் மைத்துனர்.
இந்த பட்டியலுக்குப் பதில் அளித்திருக்கும் வானதி சீனிவாசன்,
‘நாங்கள் வாரிசு அரசியல் என்று சொல்வது, ‘கட்சித் தலைமை பொறுப்பு ஒரே குடும்பத்தின்
கையில் இருப்பதைத் தான். வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லவில்லை’ என்கிறார்.
வாரிசுகள் வரலாம் என்று கட்சித் தலைமைக்கும் வாரிசுகள் வரத்தானே
செய்வார்கள்?