Share via:

நின்னா வைணவம், படுத்தா சைவம் என்று இந்து மதத்தை பொன்முடி அவமானப்படுத்தி
பேசியதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. எனவே, அவர் உடனடியாக கட்சிப் பொறுப்பில்
இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் இந்துக்களுக்கு அமைச்சர் சேகர் பாபு அவமானம்
செய்திருக்கிறார் என்று கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
இந்து அறநிலையத்துறை குறித்து சட்டமன்றத்தில் விவாதம் நடைபெறும்
நிலையில் இன்று அமைச்சர் சேகர் பாபு மெரினா பீச்சில் இருக்கும் கருணாநிதி சமாதியை வணங்கி
ஆசிர்வாதம் பெற்றார். அந்த நேரத்தில் கருணாநிதி சமாதியில் இந்து கோயில் வைக்கப்பட்டுள்ள
சம்பவம் இந்து மதத்தினரை கடும் கோபத்துக்கு ஆளாக்கியிருக்கிறது.
இது குறித்து அ.தி.மு.க.வினர், ‘’இறந்தவர் சமாதியில் அடிப்படை
அறிவு உள்ள எவராவது கோபுரம் வைப்பார்களா? உங்கள் தலைவரை மகிழ்விக்க, குடும்ப எஜமானர்களுக்கு
விசுவாசம் நிரூபிக்க, கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைக் கொச்சைப் படுத்துகிறீர்களா?
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்றார் அண்ணா. ஆனால், அந்த கொள்கைக்கும் மதிப்பளிக்காமல்,
அடிப்பொடிகளை ஏவிவிட்டு கடவுள் நிந்தனைகளை செய்வதையே முழுநேர வேலையாகக் கொண்ட தீயசக்தியின்
புதைவிடத்தில் கோபுரத்தை வைப்பதை விட, சமயத்திற்கும் மக்களின் கடவுள் நம்பிக்கைக்கும்
இந்த ஸ்டாலின் மாடல் அரசு செய்யக்கூடிய துரோகம் ஏதேனும் உண்டா?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
அதேபோல் பா.ஜ.க.வினரும், ‘’தி.மு.க.வினர் அநியாயத்திற்கு ஒரு அளவே
இல்லையா? கருணாநிதியின் சமாதியில் கோவில் கோபுரத்தை வரைந்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.
ஓட்டு மொத்த ஹிந்துக்களை இழிவுபடுத்தும் செயல் இது. ஸ்டாலின் உடனடியாக இந்த செயலை கண்டிப்பதோடு,
சமாதியின் மீது உள்ள கோபுரத்தை அகற்ற உத்தரவிட வேண்டும். ஹிந்து விரோத திமுக அரசே,
ஆலயத்தை விட்டு வெளியேறு. இந்த நாள் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சமாதி கட்ட துவங்கிய
நாளாகட்டும்.’’ என்று கொதிக்கிறார்கள்.
கருணாநிதி சமாதியில் இனிப்புகள், பிரியாணி வைத்து படையல் போடும்
திமுகவினர் இது வரையிலும் எந்த விளக்கமும் தரவில்லை. திராவிட மாடல் ஆட்சியை தொடர்ந்து
கொச்சை படுத்திவரும் சேகர் பாபு இப்போது தேவையில்லாத சிக்கலை உருவாக்கி இந்துக்களிடம்
கெட்ட பெயரை சம்பாதித்துள்ளார். இவர் மீதும் கட்சி நடவடிக்கை பாய வேண்டும் என்பதே உடன்பிறப்புகளின்
எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஸ்டாலினை நிம்மதியா இருக்க விட மாட்டேங்கிறாங்களே…