Share via:
மனைவி மும்தாஜ் நினைவாக ஷாஜகான் கட்டிய காதல் சின்னம் தான் இந்த தாஜ்மகால். காதலர்கள் பெரும்பாலும் தனது துணைக்கு கொடுக்கும் பரிசுகளில் முக்கியப் பங்கு வகிப்பது இந்த தாஜ்மகால் உருவம் பொறித்த பரிசுப் பொருட்கள் தான். காதல் திரைப்படம் என்றால் இயக்குனர் உடனடியாக ஆக்ராவுக்கு படையெடுப்பார்கள்.
மேலும் உலக அதிசயங்களில் ஒன்றான இந்த தாஜ்மகாலுக்குள் ரகசிய அறைகள் உள்ளன என்றும் இதற்கு முன்னர் அந்த இடத்தில் சிவன்கோவில் இருந்தது என்றும் பலர் சர்ச்சைகளை கிளப்பியது அனைவருக்கும் நினைவிருக்கும்.
அப்படி பல சர்ச்சைகளுக்கு ஆளான தாஜ்மகால், பா.ஜ.க. ஆட்சியில் காவி சாயம் பூச பார்க்கப்படுவது பெரும் வேதனையாக மாறியிருக்கிறது. தாஜ்மகால் இதற்கு முன்பு ஒரு இந்து கோவிலாக இருந்தது என்றும் சிவன் கோவிலுக்கான அடையாளங்கள் இருப்பதாகவும் இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் கடந்த சில காலமாக குற்றம்சாட்டி வருவது ஒரு புறம் இருக்க தற்போது மேலும் ஒரு பிரச்சினை கிளம்பியுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக, தாஜ்மகால் வளாகத்தில் கங்கை நீரை தெளிப்பது, ஓம் ஸ்டிக்கர் ஒட்டுவது என தீவிர வலதுசாரி அமைப்பான அகில பாரத இந்து மகாசபை அமைப்பினர் களேபரம் செய்து வருகின்றனர். மேலும் அவர்கள், தேஜோமகால் என்று முன்பு அழைக்கப்பட்ட தாஜ்மகால், முகாலயர் காலத்திற்கு பிறகு தாஜ்மகால் என்று மாற்றப்பட்டதாகவும் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கனவில் வந்த சிவகுமார் தாஜ்மகாலில் கங்கை நீரை தெளிக்குமாறு கூறி கங்கை நீரை தெளிக்க வந்த பெண்ணை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.