Share via:
தேனி நகர இந்து எழுச்சி முன்னணி சார்பாக நகர பொது செயலாளர் சிவராம் அவர்கள் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு பள்ளிகளை சீரமைக்க. ஆர்பாட்டம் நடைபெற்றது..
அரசு பள்ளிகள் சீரமைப்பிற்கான கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது “தேனி மாவட்டத்தில் உள்ள பல அரசு கட்டிடங்கள் பராமரிப்பு இல்லாமல் சேதமாகி வருகிறது. தற்போது கனமழை காரணமாக விபத்துகள் ஏற்பட்டு மனித உயிர் இழப்புகள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள கட்டிடங்களையும் ஆய்வு செய்து அதன் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டியும்,மிகவும் பழுதான கட்டிடங்களை உடனடியாக அகற்றிவிட்டு புதிய கட்டிடங்களை கட்டித் தர வேண்டும் ” என்கிற கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தும் பிறகுமாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் ஆர்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்பாட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.