Share via:
பிரதமர் மோடி என்ன செய்தாலும் பிரமாண்டமாகவே இருக்கும். குஜராத்தில் மிகப்பெரிய ஸ்டேடியம், உ.பி.யில் மிகப்பெரிய நெடுஞ்சாலை, அதிவேகத்தில் வந்தேபாரத் என்ற வரிசையில் மிகப்பெரும் நாடாளுமன்றம் கட்டினார். அதேநேரம் எதுவுமே தரமாக இருக்காது.
பாலங்களும், சாலைகளும் அதற்குள் பல்லைக் காட்டிவிட்டன. அதேபோல் நாடாளுமன்றத்திலும் மழை பெய்து அதன் தரத்தைக் காட்டிவிட்டது. இது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கைக்கு எந்தப் பதிலும் இல்லை. அதற்குப் பதிலாக நேருவே குற்றம் சாட்டப்பட்டார்.
அதாவது, பழைய நாடாளுமன்றத்தை அவர் ஒழுங்காகக் கட்டியிருந்தால் புதிதாக மாற வேண்டிய அவசியம் வந்திருக்காது. புதிய நாடாளுமன்றம் கட்டவில்லை என்றால் ஒழுகியிருக்காது எனும் அளவுக்கு கிண்டலும் கேலியும் பறக்கிறது.
இப்போது அதானிக்கு எதிராக ஹிண்டன்பர்க் அதிரடி குற்றச்சாட்டுகளையும் ஆதாரங்களையும் வெளியிட்டு வருகிறது. இவற்றை எல்லாம் மோடி அரசு கொஞ்சமும் கண்டுகொள்வதில்லை என்பது வேறு விஷயம். இந்த நிலையில் நாடாளுமன்றம் கட்டும் காண்டிராக்ட்டில் நடந்திருக்கும் ஊழல் குறித்தும் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட வேண்டும் என்று கிண்டலாக பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அப்போது தான், இது உலக அளவில் மோடியின் ஆளுமைத் திறனைக் காட்டும் என்கிறார்கள்.
மோடியின் முகத்திரை கிழியும் வரை மோடியும் அமித் ஷாவும் ஜாலி ரெய்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்.