News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நடிகர் விஜய்சேதுபதியின் மகன் சூர்யாசேதுபதி ‘பீனிக்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வரும் விஜய்சேதுபதி ஆரம்ப காலங்களில் சிறு சிறுவேடங்களில் திரைப்படங்களில் தலை காட்டிக் கொண்டிருந்தார். அதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இயல்பான நடிகர் என்ற பெயர் பெற்ற விஜய்சேதுபதி தனது மகனான சூர்யா சேதுபதியை நானும் ரவுடிதான், சிந்துபாத் உள்ளிட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்திருப்பார்.

 

இந்நிலையில் பிரபல சண்டை மாஸ்டரான அனல் அரசு இயக்கத்தில் சூர்யா சேதுபதி ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார். கதாநாயகி குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. இன்று பீனிக்ஸ் திரைப்படத்தின் படபூஜை சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடைபெற்றது. இத்திரைப்படத்தை பிரேவ்மேன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ராஜலெட்சுமி அரசகுமார் தயாரிக்க சாம் சி.எஸ். இசையமைக்கிறார். விஜய்சேதுபதிக்கு கிடைத்த ஆதரவு அவரது மகனான சூர்யா சேதுபதிக்கும் கிடைக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link