News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய அரசியல் பிரபலங்களின் லிஸ்ட் இதோ உங்களுக்காக.

 

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது பிறந்தநாள் மற்றும் 61வது குருபூஜை விழா இன்று கோகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு இன்று காலை முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

 

அந்த வகையில் காலை 8 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார்.

 

அதன் பின்னர் சசிகலா, அ.தி.மு.க. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ,தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் அடுத்தடுத்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் வந்திருந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து தனது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்தினார்.

 

இதற்கிடையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தேவர் நினைவிடத்திற்கு செல்ல மதுரை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அதன் பின்னர் 50 தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்புடன் மதுரை தெப்பக்குளம் சென்ற அவர், மருது சகோதரர்கள் நினைவிடத்திற்கு சென்று மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு பின்னர் பசும்பொன் புறப்பட்டு சென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link