Share via:
0
Shares
(தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் ஆங்காங்கே தொடர் மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (நவ.23) தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியது.
இந்நிலையில் நீலகிரி, கோவை, தேனி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையை பொறுத்தவரை கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
Tagged latest