Share via:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்க கனமழையும், விட்டுவிட்டும் மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவு சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ள நிலையில், தமிழகத்தில் திடீரென்று ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு வீடுகளில் திடீரென்று விரிசல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாளை (ஆகஸ்டு 6) ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு திடீரென்று வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், கேரளா மாநிலம் வயநாடு போல தமிழகத்திலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் நீலகிரி மாவட்ட மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.