News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வந்தது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேபோல் சென்னையில் ஒரு சில பகுதிகளில் நேற்று காலை முதல் விடிய விடிய கனமழை கொட்டி வருகிறது.


இந்நிலை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளபடி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில்  இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link