Share via:
புத்தக வெளியீட்டு
விழா என்றால் அந்த புத்தகம் தொடர்பான கருத்துக்களை முன்வைத்து சிறு விவாதம் நடைபெறும்.
ஆனால், நீதிபதி சந்துரு தவிர வேறு யாரும், எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற
நூல் குறித்துப் பேசவே இல்லை. இதன் அர்த்தம்
விஜய் இங்கு அரசியல் பேசத்தான் வந்தார், அம்பேத்கர் புத்தகம் பற்றி அல்ல என்று நாம்
தமிழர்கள் கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்கள்.
இது குறித்து நாம்
தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்தி, ‘’பொதுவாகப் புத்தக வெளியீட்டு விழாவின்போது,
அதனை வெளியிடுபவர்கள் முன்கூட்டியே அப்புத்தகத்தைப் பெற்று, முழுமையாக வாசித்துவிட்டு
வெளியீட்டு நிகழ்வின்போது நூலின் உள்ளடக்கக் கருத்துகள் குறித்து சிலாகித்துப் பேசுவார்கள்;
அதிலுள்ள சிறந்த செய்திகளை மேற்கோள் காட்டுவார்கள்; நூலைப் படிக்க வேண்டியதன் அவசியத்தை
வலியுறுத்துவார்கள். அப்படி, புத்தகத்திலிருந்து ஒரு வரியையாவது மேற்கோள் காட்டிப்
பேசினாரா விஜய்?முதலில் அப்புத்தகத்தை வாசித்தாரா விஜய்?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதே போல் நாம் தமிழர்
கட்சியினர் ஊழல் பற்றி விஜய்யும் ஆதவ் அர்ஜுனாவும் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு
சமம் என்கிறார்கள். அதாவது, ‘’ஊழலை பற்றி விஜய்யும் ஆதவ் அர்ஜுன ரெட்டி பேசுவது தான்
வேடிக்கையாக இருக்கிறது. ஆதவ் அர்ஜுன மாமனார் தான் லாட்டரி மார்டின் அங்க என்ன ஊழல்
செய்தார் என கேக்குறீங்களா ? ஒரு பக்கம் அரசு அனுமதி சீரியல் நம்பர் லாட்டரி அடித்து
விற்பார்கள், இன்னொரு பக்கம் குலுக்கலில் சேர்க்கப்படாத சீரியல் நம்பர் லாட்டரி அடித்து
விறப்பார்கள். இப்படி தான் பல ஆயிரம் கோடி சம்பாதித்தார்கள் ஆதவ் குடும்பத்தினர். அந்த
பணத்தில் தான் இவர் பல தொழில் செய்து வருகிறார்.
அடுத்து விஜய். இவர்
வாங்கும் 250 கோடி ருபாய் சம்பளத்தில் கணக்கு காட்டுவது ஒரு சில கோடிக்கு மட்டும் தான்.
பாக்கி இருக்கும் பணம் அனைத்தும் கருப்பு பணமாக சம்பளம் பெறுகிறார். கருப்பு பணம் முழுவதும்
அன்பு செழியன் மூலம் மார்கெட்டில் குறைந்த வட்டியில் புழங்கி கொண்டு இருக்கிறது. அது
மட்டும் அல்ல சென்னையில் பல ரீல் எஸ்டேட் புரமோட்டர்ஸ் இன்வெஸ்ட்மென்ட் பணத்தில் விஜய்
பணமும் பல இடங்களில் கருப்பு பணமாக உள்ளது. இவனுக தான் ஊழலை பற்றி பேசி ஒழிக்க போரானுகளாம்’’
என்று கிண்டல் செய்கிறார்கள்.
அதோடு, திருமாவளவனை
எப்படியாவது கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதுதான் விஜய் திட்ட்டம். அதற்காகவே இந்த
நாடகம் என்கிறார்கள். புத்தக விழாவை திருமாவளவன் பயந்த மாதிரியே அரசியல் விழாவா மாத்திட்டாங்கப்பா…