News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு மக்கள் கடலலை போன்று கலந்துகொண்ட இறுதிச்சடங்கு நிகழ்வு என்றால், அது கேட்பன் விஜயகாந்த் இறுதி ஊர்வலம் தான். யாரும் கேட்காமலே கேப்டன் விஜயகாந்திற்கு அரசு மரியாதை வழங்கப்பட்டு 72 குண்டுகள் முழங்க உடல் புதைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விஜயகாந்த் புதைக்கப்பட்டதும் அவரது மனைவியும் தே.மு.தி.க.வின் பொதுச்செயலாளருமான பிரேமலதா பேசிய விவகாரம் பொதுமக்களிடமும் கேப்டன் ரசிகர்களிடமும் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

கேப்டன் அணிந்திருந்த கண்ணாடி, செயினையும் பிரேமலதாவே கழட்டியதை அத்தனை பேரும் மிகப்பெரும் அவமரியாதையாகப் பார்க்கிறார்கள். அதோடு, ‘தே.மு.தி.க.வை ஆட்சியில் அமர வைப்பதே இந்த நன்னாளில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய சபதம்’ என்று பேசியிருப்பதுதான் கடும் கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜயகாந்த் மறைந்த துக்கம் தாளாமல் சகலரும் அழுது புலம்பும் நாளை நன்னாள் என்றும் தே.மு.தி.க.வுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்றும் தேர்தல் பிரசாரம் போன்று பேசியதையும் அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை.

ஏனென்றால், இந்த இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட அத்தனை பேரும் தே.மு.தி.க.வினர் அல்ல. கேப்டன் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டு தானாகவே வந்து குவிந்தவர்கள். ஆகவே, இந்த நாளில் இப்படி பேசி, தன்னுடைய அரசியல் ஆசையைத்தான் காட்டியிருக்கிறார் என்று வருந்துகிறார்கள்.

எங்கு எதை பேசவேண்டும் என்று தெரியாமல் பேசினால் இப்படித்தான்… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link