News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கலைஞர் 100 என்ற பெயரில் கருணாநிதி நூற்றாண்டு கொண்டாட்டம் இன்று தி.மு.க. முடிவுக்குக் கொண்டுவருகிறது. இந்த நிலையில் அவருக்கு தி.மு.க.வினர் பாராட்டி வாழ்த்து பதிவிடும் நேரத்தில், ’ஹேப்பி பர்த்டே ஃபாதர் ஆஃப் கரப்ஷன்’ என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

கட்டுமரம், தன் குடும்பத்தை மட்டும் வளர்த்தவர், திருட்டு ரயில் என்றும் பல்வேறு ஹேஸ்டேக் மூலம் அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சியினர் இணைந்து பரபரப்பாக்கி வருகிறார்கள்.

அ.தி.மு.க.வைச் சேர்ந்த கிஷோர் கே.சாமி வெளியிட்டுள்ள தமிழன்னை கார்ட்டூன் படு வைரலாகிறது. தமிழ் அன்னையை பாதுகாக்க வந்த கருணாநிதி அத்தனை நகைகளையும் கழட்டிவிட்டு ஓடுவதாக படம் போட்டுக் காட்டியிருக்கிறார். இதற்கு சமூகவலைதளத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.

அதேநேரம், முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி உள்ளிட்ட அத்தனை தலைவர்களும் கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்டு வருகிறார்கள்.

முத்தமிழறிஞர் கலைஞர் செய்த சாதனைகள் அனைத்தும் காலத்தை வென்று நிற்கும் என நிறைய பட்டியல் போடுகிறார்கள். அவற்றில் இருந்து 75 மட்டும் இங்கே.

1.அரசு போக்குவரத்துத்துறை என்ற துறையை உருவாக்கினார் 2. பஸ் போக்குவரத்தை தேசியமயமாக்கினார் 3.மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தார் 4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கு சாலை வழித்தடம் அமைத்துக் கொடுத்தார் 5.தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தார் 6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தார் 7. இலவச கண்ணொளி திட்டம் 8. பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லம் 9. கை ரிக்ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக்ஷா கொடுத்தார்.

10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தார் 11. குடியிருப்புச் சட்டம் (வாடகை நிர்ணயம்) போன்றவை கொண்டு வந்தார் 12. இந்தியாவிலேயே முதன்முதலில் காவல்துறை ஆணையம் அமைத்தார் 13.பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தார் 14. அரசியலமைப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கென அமைப்பை அமைத்தார் 15. அரசியலமைப்பில் இட ஒதுக்கீடு BC- 31% , SC – 18 % ஆக உயர்த்தியது 16. +2 வரை இலவச கல்வி 17. மே 1 தொழிலாளர் தினத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்தார் 18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை விடுமுறையாய் அறிவித்தார் 19. முதல் விவசாயக் கல்லூரி (கோவை) உருவாக்கினார் 20. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது

21. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் 22. கோவில்களில் குழந்தைகளுக்கான கருணை இல்லம் அமைத்தார் 23. சேலம் இரும்பு தொழிற்சாலை 24. நில விற்பனை வரையறைச் சட்டம் அமைத்தது 25. இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலியில் கொண்டு வந்தது 26. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துக்குடியில் கொண்டு வந்தது 27. SIDCO உருவாக்கினார். உப்பு வாரியம் அமைத்தார் 28. SIPCOT உருவாக்கினார். தேயிலை வாரியம் அமைத்தார் 29. உருது பேசும் இஸ்லாமியயர்களை பிற்படுத்தப்பட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தார் 30. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டு வந்தார் 31. மனுநீதி திட்டம் தந்தார் 32. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தார் 33. பசுமை புரட்சி திட்டம் தந்தது 34. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தப்பட்டோரில் இணைத்தது 35. மிக பிற்படுத்தப்பட்டோரில் வன்னியர், சீர்மரபினரை சேர்த்தார் 36. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20 % தனி இட ஒதுக்கீடு தந்தார் 37. அருந்ததி இன மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு தந்தார் 38. பழங்குடியினருக்கு 1 % தனி இட ஒதுக்கீடு தந்தார் 39. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தார் 40. வருமான உச்சவரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச கல்வி இளங்கலை பட்டப்படிப்பு வரை தந்தது.

41. இந்தியாவிலேயே முதன்முதலில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தார் 42. சொத்தில் பெண்களுக்கு சம உரிமையை சட்டமாக்கினார் 43. அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு 44. ஆசியாவிலேயே முதன்முதலில் கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகம் 45. ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவித் திட்டம் 46. விதவைப் பெண்களுக்கு மறுமண நிதியுதவித் திட்டம் 47. நேரடி நெல் கொள்முதல் மையம் அமைத்தார் 48. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தார் 49‌. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அமைத்தார் 50. கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி திட்டம் 51. மகளிர் சுய உதவிக் குழு அமைத்தார் 52. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நிறுவியது 53. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் நிறுவியது 54. டாக்டர் M.G.R மருத்துவக்கல்லூரி நிறுவியது 55. காவிரி நடுவர் மன்றம் அமைத்ததற்கு காரணமாக இருந்தவர் 56. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டு வந்தார் 57. உள்ளாட்சி பதவிகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொண்டு வந்தார் 58. மெட்ராஸ் சென்னையாக்கியது. 59. இரு பெண் மேயர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வரச் செய்தது 60. தொழில்முறை கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு

61. குமரியில் ஐயன் வள்ளுவருக்கு வானுயர சிலை 62. தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்று தந்தது 63. செம்மொழி மாநாடு நடத்தியது 64. சத்துணவில் முட்டையை அறிமுகம் செய்தார் 65. விவசாய கடன் தள்ளுபடி 66. சமத்துவபுரம் அமைத்தவர் 67. சமச்சீர் கல்வி தந்தவர் 68. உழவர் சந்தை அமைத்தார் 69. டைடல் பார்க் , ELCOT 70. செம்மொழி பூங்கா, தொல்காப்பிய பூங்கா 71. ஆசியாவிலேயே மிகப்பெரிய கோயம்பேடு பேருந்து நிலையம் 72. கடல்சார் தேசிய பல்கலைக்கழகம் 73. திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் 74. கத்திப்பாரா மேம்பாலம் 75. மெட்ரோ ரயில் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link